Tuesday, June 18, 2019

கோவில்களில் ஏன் கும்பாபிஷேகம் செய்வதன் மர்மங்கள் || Consecrated Facts In temple _ Tholilnutpam..!


இந்துகளின்  கோவில்கள் அனைத்திலும் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறையோ அல்லது மழை, வெயில் காலங்களில்லோ அல்லது கோவில் பழுதடைந்தலோ புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்யும் வழக்கங்களை கொண்டுள்ளார்கள். கோவில்களை புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்யும் பொது கோவிலின் பிரகாரத்தின் சிலைக்கு அடியில் செப்பு தகடுகளை தங்க தகடு போன்ற ஆபரணங்களை  வைத்து அதன் மேல் சிலையை வைப்பார்கள். பிறகு கோவிலின் மேற்பகுதியில் கோபுரம் இருக்கும் இடத்தில் உணவு தானியங்களை போட்டு அதன் மேல் கோபுரத்தை வைப்பார்கள்.  உங்கள் ஊரில் நடக்கும் கோவில் கும்பாபிஷேகங்களை நன்றாக கவனித்து பாருங்கள் தெரியும். 

ஏன் இதெல்லாம் செய்கின்றார்கள் இதனால் என்ன பயன் என்றாவது ஒரு நாள் யோசித்து பார்த்திருக்கிர்களா ?

நானும் கூட இப்படியெல்லாம் யோசித்து பார்த்தது இல்லை இதெல்லாம் ஒரு சடங்கு சம்ப்ரதாயம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சமீபத்தில் பார்த்த திரைப்படம் ஒன்றின் மூலம் இதெல்லாம் அறிந்துகொண்டேன். அந்த திரைப்படத்தின் பெயர் அகவன். அந்த திரைப்படத்தை விளம்பரம் செய்யும் நோக்கத்தில் நான் இதை கூறவில்லை. அந்ததிரைப்படத்தில்  நல்ல ஆன்மிக கருத்துக்களை தெளிவாக விளக்கி இருக்கிறார்கள். பிறகு நானும் இந்த மர்மங்களை இணையத்திலும்  சிலருடன் கேட்டு அறுந்து கொண்டேன் உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்தோடு இந்த பதிவை எழுதியுள்ளேன்.

அன்றைய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அசைக்க முடியாத கற்களையும் தூண்களை கொண்டும் எட்டாத உயரத்தில் கோவில்கள் கட்டி இருப்பார்கள் உதாரணத்திற்கு  நாம் தஞ்சை பெரியகோவிலை எடுத்துக் கொள்வோம். அன்றைய கால அசைக்க முடியாத கட்டிட கலை திறமைகளை  நம் தமிழ் மக்களும் , மன்னர்களும் நிரூபித்து காண்பித்திருக்கிறார்கள். இது இன்றும் அசைக்க முடியாத உண்மையென நாம் அனைவரும் அறிந்ததே ..!


இப்படி பிரமிக்க கூடிய கட்டிட கலையில் கோவில்கள் எதற்கு ?

அன்றைய மன்னர்கள் ஆட்சி காலத்தின் போது அந்நாடுகளில் ஏதவது பேரழிவை உண்டாக்க கூடிய இயற்கை சீற்றங்களால் நாடே அழியும் நிலை ஏற்படும். உதவி வேண்டுமென்றால் பக்கத்துக்கு நாடுகளுக்கு தெரியப்படுத்த தூது அனுப்புவார்கள் எப்படியும் அவர்களுக்கு உதவி வருவதற்கு நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு மேல் ஆகும். இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தில் நம் ஏதாவது பேரழிவு ஏற்பட்டால் உடனடியாக உதவியை  பெறுகிறோம். ஆனால் அன்றைய காலகட்டத்தில் அப்படி இல்லை உதவி வருவதற்கு சில நாழிகைகள் ஆகும்.  மக்கள் உணவு ,ஊடை  தங்குவதற்கு இன்றி இயற்கை சீற்றத்தால் நாடே அழியும் நிலை கூட  ஏற்படும்.

அன்றைய கால மன்னர்கள் இதற்கு ஒரு வழியை  கண்டுபிடித்தனர் அது தான் இந்த கும்பாபிஷேக  முறை. பிறகு தான் எட்டாத உயரத்தில் நீரால் மூழ்காத அளவிற்கு கோவில்களையும் மணிமண்டபங்களையும் காட்டினார். கோவில் கோபுரத்தின் மேற்பகுதியில் தானியங்களை பதுக்கி வைத்தனர் . கோவில் கருவறைனுள் சாமி சிலைக்கு அடியில் குழிகளை ஏற்படுத்தி நகை ஆபரணகளையம் பொன் பொருட்களையும் பதுக்கி வைத்தனர் . 

மழை வெள்ளம் போன்ற பேரழிவுகளின் போதும் மக்களை மாணிமண்டபங்களில் தக்க வைத்து கோவிலின் மேற்க்கோபுரங்களை அகற்றி அங்கு பதுக்கி வைத்திருக்கும் தானியங்களை எடுத்து மக்களுக்கு உணவாக அளித்தனர். நாடுகளில் செல்வம் குன்றி காணப்படும் நிலைகளில் கும்பாபிஷேகம் எனும் முறையை பின்பற்றி கருவரையில் இருக்கும் சாமியை நகர்த்தி அடியில் வைத்திருக்கும் செல்வங்களை எடுத்து பயன்படுத்தி வந்தனர். இந்த உண்மைகளை கல்வெட்டின் மூலமாகவும் ஓலைசுவடியின் மூலமாக மறைமுகமாக தெரியப்படுத்தி சென்றனர். நம் முன்னோர்கள் இவை தான் கோவிலில் கும்பாபிஷேகம் செய்யும் மர்மங்கள்  ஆனால் நாம் இன்று அந்த முறையை தான் கும்பாபிஷேக  சடங்குளாக பின்பற்றி வருகிறோம். இந்த பதிவு உங்களக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி...
Read More

Saturday, June 15, 2019

நோமோபோபியாவினால் நீங்களும் பாதிக்கப்பட்டு இருக்கலாம் கவனம் _ Nomophobia || Tholilnutpam...!


மொபைல் போன்கள் நம் அன்றாட வாழ்வின் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.  மனிதனின் பதினொன்றாவது விரலாகவும் நம்முடைய இரண்டாவது உயிராகவும் மொபைல் போன்கள் நம்முடன் ஒன்றிப்போய்விட்டது. இன்றைய உலகில் பிறக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மொபைல் போன்களுக்கு போதையாகி உள்ளோம்.அன்றைய  கலங்களிலில் கை குழந்தைகள் அழுது கொண்டிருக்கும் பொது தாலாட்டு படி அழுகையை நிறுத்து தூங்க வைப்பார்கள். ஆனால் இன்று மொபைல் போன்களை குழந்தையின் கையில் கொடுத்து அழுகையை நிறுத்துகிறார்கள். இது தான் நம்முடைய சோம்பேறித்தனம். இதனால் தான் நோமோபோபியா போன்ற நோய்களினால் பாதிக்கப்படுகிறோம்.

நோமோபோபியான் என்பதன் விளக்கம் நோ + மொபைல் + போன் + போபியா. 

18 முதல் 20 வயது வரை உள்ள நபர்கள் இந்த நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் ஓரளவு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் குறைந்த ஆளவே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று கண்டறிந்து 2008 ஆம் ஆண்டு UK (United Kingdom) உள்ள யூகோவ் (YouGov) என்ற நிறுவனம் இந்த அறிக்கையை வெளியிட்டது.


தினமும் நாம்  காலையில் எழுந்தவுடன் மொபைல் போன் நம் கையில் இல்லை என்றால் பதற்றத்துடன் தேடுவோம். மொபைல் போன்களில் சார்ஜ்ஜோ அல்லது இன்டர்நெட் பேக்கோ முடிந்து விட்டால்   மனமுடைந்து போய்விடுவோம். நம்மால் சிறிது நேரம் கூட மொபைல் போன் இல்லாமல்  இருக்க முடியாது. அதுமட்டுமின்றி வாட்ஸ்சப் , பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்குள் மூழ்கி கிடப்போம் ஏதாவது நோட்டிபிகேஷன் வந்தால் போதும் அப்பப்போ எடுத்து பார்த்துக்கொண்டே இருப்போம். அடிக்கடி யார் ஆன்லைன் வந்து இருக்கிறார்கள்  என்று பார்த்துக்கொண்டே இருப்போம் இதெல்லாம் நீங்களும் செய்து கொண்டுருந்தால்  நீங்களும் நோமோபோபியா நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள்.

இந்த நோமோபோபியாவில் இருந்து எப்படி விடுபடுவது ?

தினமும் நீங்கள் மொபைல் போன் பயன்படுத்தும் நேரத்தை குறையுங்கள் . அதற்கான நேரத்தை ஒதுக்கி குறைந்த நேரம் மட்டுமே பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். மொபைல் போன்களின் உள்ள சமூக வலைதள ஆப்களுக்கு நோட்டிபிகேஷன்களை ஆப் செய்து வைய்யுங்கள். முடிந்த அளவு பொழுது போக்கிற்காக மொபைல் போன்களை பயன்படுத்துவதை தவிருங்கள். தேவையின் பொது மட்டும் பயன்படுத்த கற்றுகொள்ளுங்கள். குழந்தைகளின் கையில் மொபைல் போனை கொடுப்பதை தவிருங்கள். நீங்களும் நோமோபோபியாவில் இருந்து விடுபடலாம். இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி... 
Read More

Tuesday, June 11, 2019

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க ? ஒரு ஐடியா || Make Money Online_Tholilnutpam

4ஜி தொழில்நுட்பம் வந்த பிறகு இணையத்தை பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே போகின்றன அடுத்து 5ஜி எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள் இந்த தொழில்நுட்ப உலகம். நாம் மொபைல் போனை பயன்படுத்தும் பொது நாம் பார்க்கும் சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் ஆன்லைனில் பணம் இப்படி சம்பாதிக்கலாம் அப்படி சம்பாதிக்கலாம் என்று நம் ஆசையை தூண்டும் வகையில் ஏதாவது போஸ்ட் செய்து இருப்பார்கள் அதை பார்த்து நாமது மொபைல் போனிகளில் தேவையற்ற ஆப் களை நிறுவது மற்றும் உங்கள் பணத்தை முதலீடு செய்வது போன்ற செயல்களால் ஏமாற்றம் மட்டுமே அடைந்து இருப்போம் இதனால் நமக்கு எந்த பயனும் கிடைத்துருக்காது. நம் நேரத்தையும்  பணத்தையும் மட்டுமே வீணாக செலவு செய்து கொண்டு இருக்கிறோம்.

இந்த பதிவை முழுமையாக பொறுமையாக  படியுங்கள் இந்த பதிவில்   ஆன்லைனில் எப்படி பணம் சம்பாதிப்பது பற்றிய தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

எப்படி சம்பாதிப்பது ?

எனக்கு தெரிந்து இரண்டு நேர்மையான வழிகளில் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க முடியும். கூகுள் ஆனது பிளாக்கர் , யூடியூப் போன்ற இணைய  சேவைகளை வழங்குகின்றது இதன் வழியாக தான் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க போகின்றோம். இதற்கு உங்களுக்கு பொறுமை அவசியம் தேவைப்படும். உங்கள் கையில் இன்டர்நெட் இணைப்புடன்  கூடிய லேப்டாப் மற்றும் மொபைல் போன்கள் இருந்தால் போதுமானது. தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ டைப் பண்ண தெரிந்து இருந்தால் கூடுதல் பலம்.

1. முதலில் புதிதாக ஒரு ஜிமெயில் ஆக்வுண்டை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

2. அந்த ஜிமெயில் ஐடியை பயன்படுத்தி உங்களக்குக்கான பிளாக்கர் மற்றும் யூடியூப் ஆக்வுண்டை ஓபன் செய்யுங்கள்.
3. உங்கள் படைப்புகளை வீடியோ மூலமாகவோ அல்லது எழுத்துக்கள் மூலமாகவோ இணையத்தில் அப்லோட் செய்வதன் மூலம் சம்பாதிக்கலாம். உதாரணத்திற்கு தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் எனக்கு ஆர்வம் அதிகம் என்பதால் அது சம்மந்தமான தகவல்களை மக்களுக்கு பகிர்ந்து கொள்ளும் வகையில் எனது தொழில் நுட்பம் பிளாக்கரில் எழுந்து கொண்டு வருகிறேன். இது சம்மந்தமான எனது படைப்புகளை யூடியூப்யில் அப்லோட் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளேன். இது போன்று நீங்களும் உங்கள் படைப்புகளை பிளாக்கர் மற்றும் யூடியூப் வழியாக மக்களுக்கு கொண்டு  போய் சேருங்கள்.

4. இதுயெல்லாம் ஓகே எப்படி இதன் மூலம் என்னால் பணம் சம்பாதிக்க முடியும் என்று நினைப்பீர்கள் அல்லவா. இதற்கு தான் கூகுள் தனது மற்றொரு சேவையான   கூகுள் ஆட்சென்ஸ்யை வழங்குகின்றது.


5. உங்கள் ஜிமெயில் ஆக்வுண்டை பயன்படுத்தி கூகுள் ஆட்சென்ஸ் ஓபன் செய்து கொள்ளுங்கள். உங்கள் பிளாக்கர் தளத்தை ஆட்சென்ஸ்யில்  விண்ணப்பியுங்கள். உங்கள் தளத்திற்கு அங்கிகாரம் (Approvel) கொடுக்கும் வரை காத்திருங்கள். ஆட்சென்ஸ்யின் விதி முறைகளின் படி உங்கள் பிளாக்கர் தளத்தை ரன் செய்து கொண்டிருந்தாள் தான் உங்களக்கு ஆஃப்ரொவல் கிடைக்கும்.

6. அங்கிகாரம் (Approvel) கிடைத்த பிறகு கூகுள் ஆட்சென்ஸ் உங்களக்கு விளம்பர கோடுகளை (Ad units) வழங்கும் . அந்த நிரல்களை உங்கள் பிளாக்கர் தளத்தில் நிறுவ வேண்டும். பிறகு உங்கள் தளத்தில் விளம்பரங்கள் காட்சி படுத்தப்படும். உங்கள் தளத்திற்கு வரும் பார்வையாளர்களை பொறுத்து உங்கள் ஆட்சென்ஸ் ஆக்வுண்ட்டில் பணம் ஏற ஆரம்பிக்கும். இதற்கு இடையில் கூகுள் உங்கள் முகவரியை சரிபார்க்க சில வெரிஃபிகேசன்களை நடத்தும். அது வரை நீங்கள் காத்திருக்க வேண்டும் பொறுமை மிகவும் அவசியம். 100$ டாலர் மேல் வந்த பிறகு உங்கள் பேங்க் ஆக்வுண்ட் மூலமாக பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இதே போன்ற விதி முறைகள் தான் யூடியூப் விடீயோக்களை அப்லோட் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்.

உங்கள் வாழ் நாள் முழுவதும் பணம் சம்பாதித்து கொண்டு இருக்கலாம் நீங்கள் தூங்கி கொண்டு இருக்கும் போது கூட பணம் சம்பாதித்து கொண்டு இருப்பிர்கள். நேர்மையும் பொறுமையும் இருந்தால் நீங்களும் வெல்லலாம் நண்பர்களே வாழ்த்துக்கள். இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி...
Read More

Thursday, June 6, 2019

விஞ்ஞானிகளுக்கெல்லாம் விஞ்ஞானி...! Albert Einstein _Tholilnutpam


இந்த உலகத்தில் எதுவுமே நிலையானது இல்லை என்ற இந்து மதத்தின் பழைய கோட்பாட்டினை உன்மை என்று இந்த உலகிற்கு நிரூபித்தவர் விஞ்ஞானிகளுக்கெல்லாம் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். சார்பியல் கோட்பாடு என்பதை இவர் உலகத்திற்கு அளித்த பொது அவர் வயது 26 தான்.

எடை , வடிவம் , நேரம் எதுவுமே நிலையானது இல்லை இந்த பிரபஞ்சத்தில் மாறாத நிலையான ஒரே விசயம் உண்டு என்றல் அது ஓளி மட்டும் தான் என்று  ஐன்ஸ்டீன் நிரூபித்தார். மற்ற எந்த அறிவியல் கோட்பாட்டை விடவும்  ஐன்ஸ்டீனினின் சார்பியல் கோட்பாடு மிகவும் பிரபலமானது.  ஐன்ஸ்டீனின் E=mc^2 என்பது விஞ்ஞானிகளின் புனித சின்னமாக ஆகிப்போனது. 

ஐன்ஸ்டீன் எது சொன்னாலும் அது பத்திரிகைகளில் தலைப்பு செய்திகளாக வந்தாது. ஒரு முறை இஸ்ரேல் நாட்டின் ஜனாதிபதி பதவிக்கூட இவரை தேடி வந்தது . அரசியலுக்கு நான் ஏற்ற ஆல் நான் இல்லை என்று ஏற்க மறுத்து விட்டார். ஐன்ஸ்டீனிற்கு அறிவியலின் மீது ஆர்வம் பிறந்த பொது அவருக்கு வயது வெறும் நான்கு தான் .

உடல் நிலை சரி இல்லாமல் இருந்த போது ஐன்ஸ்டீனின் தந்தை ஒரு கப்பலுக்கு வழிகாட்டும் காம்பஸ் ஒன்றை பரிசாக கொடுக்க அதில் இருந்த காந்தம் அவரை தூங்க விடாமல் செய்தது. போதா குறைக்கு அவருக்கு கிடைத்த வேலையும் அறிவியல் சமந்தமானது. விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை பதிவும் செய்யும் அலுவலகத்தில் வேலை கிடைத்தது. அந்த வேலையில் சொந்தமாக ஆராட்சி செய்ய இவருக்கு நிறைய நேரம் கிடைத்தது.

மிகப்பெரிய சக்தியை கூட மிக சிறிய எடையுள்ள  அணுவில் உண்டாக்க முடியும் என்ற சார்பியல் தத்துவத்தின் அடிப்படையில் தான் அணு குண்டு உருவாக்கபட்டது. அனாலும் ஐன்ஸ்டீன் ஒரு அமைதி விரும்பி யுத்தங்களை வெறுத்தார் 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மதம் அமெரிக்க விமானம் ஜப்பான்கள் மீது அணு குண்டுகளை வீசி ஹிரோஷிமா நாகசாகி ஆழ்ந்து போனது இந்த செய்தியை கேட்ட ஐன்ஸ்டீன் மிகவும் மன முடைந்து போனார்.

இசையில் ஐன்ஸ்டீனிற்கு நல்ல ஈடுபாடு உண்டு மேடைகளில் கச்சரேரி செய்யும் அளவிற்கு வயலின் வாசிக்க தெரியும். 1955 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஐன்ஸ்டீன் இறந்து போனார். புகழின் உச்சில் இருந்த ஐன்ஸ்டீனிடம் உங்களக்கு எதை கண்டுபிடிப்பதில் ஆர்வம் அதிகம் என்று ஒருவர் கேட்டார் . அதற்கு அவர் கடவுள் எப்படி இந்த உலகை படைத்தார் என்பதை ஒரு நாள் கண்டுபிடித்திட வேண்டும் என்று கூறி இருக்கிறார். இவரே  விஞ்ஞானிகளுக்கெல்லாம் விஞ்ஞானி ஆவர். இந்த பதிவு உங்களக்கு பிடித்திருக்கும் என்று நம்புகிறேன் நன்றி.
Read More

உங்கள் கணினிக்கு தேவையான சாப்ட்வேர்களை ஒரே இடத்தில் சுலபமாக டவுன்லோட் செய்ய வேண்டுமா..! Ninite_ Tholilnutpam


வணக்கம் நண்பர்களே...  நாம் புதிதாக கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்களை வாங்கி இருப்போம் அல்லது நமது கம்ப்யூட்டர்களுக்கு இயக்க முறைமையை அதாவது ( Operating System ) வேறொன்றாக  மாற்றி இருப்போம். இது போன்ற நிலைமைகளின் பொது நம் கம்ப்யூட்டர்களுக்கு தேவையான அத்தியாவசியமான சாப்ட்வேர்கள் தேவைப்படும் அப்போது  நம்பகம் இல்லாத சில இணைய தளங்களுக்கு சென்று வைரஸ்களை தான் நமது கம்ப்யூட்டர்களுகுள் புகுத்தி இருபோம். கடைசி வரையில் எந்தவொரு சாப்ட்வேர்களையும் முறையாக நிறுவி (Install) செய்து இருக்க மாட்டோம். ஒவ்வொரு சாப்ட்வேர்களையும் டவுன்லோட் செய்ய ஒவ்வொவொரு இணைய தளங்களுக்கு சென்று நேரத்தை தான் செலவு செய்திருப்போம்.

உங்களிடம் இன்டர்நெட் இணைப்பு இருந்தால் மாட்டும் போதும் இது சாத்தியம். உங்கள் கம்ப்யூட்டர்களுக்கு தேவையான அத்தியாவசியமான சாப்ட்வேர்களை ஒரே இடத்தில் சுலபமாக டவுன்லோட் செய்ய முடியும். கீழே கொடுக்கப்பட்டுள்ள Ninite_Tholilnutpam என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள் மற்றொரு Ninite என்ற இணைய பக்கம் ஓபன் ஆகும்.
அந்த இணைய பக்கத்தில் உங்களை கணினிக்கு தேவையான சாப்ட்வேர்களை கிளிக் செய்து Select செய்யுங்கள். பிறகு கீழே Get Your Ninite என்பதை கிளிக் செய்யுங்கள். நீங்கள் Select செய்த அனைத்து சாப்ட்வேர்களும் தனக்காகவே டவுன்லோட் ஆகி பிறகு தானாகேவ install ஆகும். இந்த பதிவு உங்களக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி.  
Read More

Tuesday, June 4, 2019

ஹேஸ் டேக் என்றால் என்ன ? #Hashtag செய்தல் நீங்களும் இணையத்தில் ட்ரெண்ட் ஆக முடியுமா ? #Tholilnutpam


பொதுவாகவே நாம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் #ஹேஸ்டேக் என்பது வந்துவிட்டது . இந்த  #Hashtag ஆனது ஒரு குறிப்பிட்ட நிகழ்வுகளை திரும்ப பார்பதற்குகாக பயன்படுகிறது. 

உதாரணத்திற்கு பழைய ஜல்லிக்கட்டு போராட்டங்களை எடுத்துக்கொள்வோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த ஜல்லிக்கட்டு போராட்டதை பார்க்க வேண்டும் என்று நினைக்கின்றிர்கள் என்றல் #jallikattu என சர்ச் செய்தலே போதும் ஜல்லிக்கட்டு பற்றிய அனைத்து தகவல்களும் வந்து நிற்கும். 

விளையாட்டாக ஹேஸ்டேக் செய்த விளைவாக தான் இப்போது உலகம் முழுவதும் ட்ரெண்டிங் ஆனார் நேசமணி  #PrayForNesamani


இது போல் சமூக வலைத்தளங்களில் உங்களுடைய படைப்பாற்றல்களை போஸ்ட் செய்து  ஹேஸ் டேக் செய்தல் போதும். இணையத்தில் நீங்கள் போடும் தகவல்கள் சம்மந்தமான  #ஹேஸ்டேக்களை  சர்ச் செய்த பார்த்தால் போதும் நீங்களும் ட்ரெண்ட் ஆக முடியும். 
Read More

Wednesday, May 22, 2019

இந்த உலகை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் தொழில்நுட்பங்கள் ..!

10 வருடங்களுக்கு முன்பு கண்டிபிடிக்கப்படாத தொழில் நுட்பங்கள் இன்றைய கால கட்டத்தில் நமது அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படி யெல்லாம் ஒரு தொழில்நுட்பம் வருமா என்று நாம் அன்றைய காலகட்டத்தில் நினைத்து கூட பார்க்கவில்லை.  ஆனால் இன்று அது நம் வாழ்வின் அங்கமாக சாதாரண ஒன்றாக மாறியிருக்கிறது. இப்படி பட்ட தொழில்நுட்ப வளர்ச்சி நமது ஸ்மார்ட் போனினில் தொடக்கி விண்வெளி வரை நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ளன. இப்படி இந்த உலகையே அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் தொழில்நுட்பங்கள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.


1.ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ( Artificial Intelligence )

2.ஆக்யுமென்டட் ரியாலிட்டி ( Augmented Reality )

3.இன்டர்நெட் ஆப் திங்ஸ் ( Internet Of  Things )

4.ப்ளாக் செயின் ( Block-chain )

5.கிளவுட் கம்ப்யூட்டிங் ( Cloud Computing )

1.ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ( Artificial Intelligence ) :


முதலில் இந்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் இந்த வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

 Artificial - செயற்கையான என்பதன் அர்த்தமாகும்.
Intelligence - அறிவுபூர்வமான அல்லது புத்திசாலித்தனமான என்பதன் அர்த்தமாகும்.

தன்னிடம் இருக்க கூடிய டேட்டாகள் (Data's)  மற்றும் (Future Experience) எதிர்கால அனுபவங்களை வைத்துக்கொண்டு ஒரு இந்திரமானது தானாகவே முடிவெடுக்கும் செயல் திறன்களை பெற்றுருப்பது தான் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ். உதாரணத்திற்கு ஸ்மார்ட் போன்னில் பயன்படுத்தும் கூகுள் அசிஸ்டென்ட் ( Google Assistant ) கூட ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ஆகத் தான் செய்ல்படுகிறது. நாம் பேசுவதை புரிந்து கொண்டு நமக்கு தேவையானதை தேடி தருகிறது.

2.ஆக்யுமென்டட் ரியாலிட்டி ( Augmented Reality ) :

முதலில் இந்த ஆக்யுமென்டட் ரியாலிட்டி  இந்த வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

Augment - என்பது தமிழில் புகுத்தல் என்பதன் அர்த்தமாகும்.

இருக்கின்ற இடத்தில் இல்லாத சில விசயங்களை டிஜிட்டல் முறையில் புகுத்துவது தான் ஆக்யுமென்டட் ரியாலிட்டி.


உதாரணத்திற்கு நாம் டிவியில் பார்க்கும் கிரிக்கெட்டில் ஒரு பந்துதானது ஒரு குறிப்பிட்ட திசையில் ட்ராவல் ஆகும் டேரெக்க்ஷன்களை கோடு போட்டு காண்பிப்பார்கள் அது தான் ஆக்யுமென்டட் ரியாலிட்டி. அங்கு இருக்கும் விளையாட்டு  வீரர்கள் மற்றும் மைதானம் எல்லாமே உண்மை தான். ஆனால் அந்த இடத்தில் வரைந்து காண்பிப்பார்கள் அந்த கோடு அது தான் அங்கு டிஜிட்டலாக புகுத்தப்பட்ட தகவல். இதை தான் ஆக்யுமென்டட் ரியாலிட்டி என்று சொல்வார்கள் . இது யாருக்கு பயன் என்று பார்த்தால்  நமக்குத் தான் வெறும் வார்த்தையில் ஒரு பந்து ஒரு குறிப்பிட்ட திசையில் செல்கிறது என்பதை சொல்வதை விட அந்த பந்து செல்லும் திசையை  வரைந்து கட்டுவதன் மூலம் நமக்கு சுலபமாக புரியும்.

3.இன்டர்நெட் ஆப் திங்ஸ் ( Internet Of  Things ) :பொதுவாக இன்டர்நெட் ஆப் திங்ஸ் என்பது நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மொபைல் போன் மற்றும் டிவி , வாஷிங் மெஷின் போன்ற சாதனங்களை இணையத்தில் ஒன்றாக இணைத்து அதை எந்த இடத்தில இருந்து வேண்டுமானாலும் கட்டுப்படுத்த இயலும்.

உதாரணமாக உங்கள் வீட்டில் இருக்கும் வாஷிங் மெஷினை இணையத்தில் உங்கள் மொபைல் போன்னுடன் இணைத்து எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் இயக்க முடியும். இந்த இன்டர்நெட் ஆப் திங்ஸ் தொழில்நுட்பத்தில் இவை சாத்தியமாகும்.

4.ப்ளாக் செயின் ( Block-chain ) :

பொதுவாக நாம் இணையத்தில் கூகுள் மற்றும் முகப்பு பக்கம் ( Facebook ) போன்ற இணையதளங்களை பயன்படுத்தி இருப்போம். உதாரணத்திற்கு நாம் கூகுளை  எடுத்துக்கொள்வோம். நாம் கூகுளை பயன்படுத்தும் பொது நம் பயன்படுத்தப்படும் தகல்வல்கள் அனைத்தும் கூகுள் சர்வரை மையமாக கொண்டு தான் சேமிக்க படுகின்றன. இந்த மையப்படுத்தப்பட்ட நெட்வோர்க்கை சுலபமாக ஹேக்கர்களால்  ஹேக் செய்ய முடியும்.


இந்த ப்ளாக் செயின் தொழில்நுட்பமானது ஒரு சங்கிலி தொடரை போன்றது. உதாரணத்திற்கு பிட் காயின் (cryptocurrency) பரிமாற்றத்தை எடுத்துகொள்வாம்.  இந்த பிட் காயின் பரிமாற்றத்தில் பாத்து நபர்கள் உள்ளனர் என வைத்துக்கொள்வோம் இந்த பாத்து நபர்களும் ஒரு குழுவாக பிணைக்கப்பட்டு இருப்பார்கள். ஒருவர் மற்றொருவருக்கு பிட் காயினை அனுப்புகிறார் என்றால் அந்த நெட்வோர்க்கில் இணைக்கப்பட்ட அணைத்து நபர்களுக்கு இந்த பரிமாற்றம் தெரியும். இந்த ப்ளாக் செயின் டெக்னாலஜி ஹேக் செய்யப்படுவது என்பது  சாத்தியமில்ல.

5.கிளவுட் கம்ப்யூட்டிங் ( Cloud Computing ) :ஒரு தொழில் நூட்பத்தை வாடகைக்கு எடுத்து பயன்படுத்துவது தான் கிளவுட் கம்ப்யூட்டிங். இதை மெய்நிகர் கணினி (Virtual Computing) என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு ஆப் உருவாக்குகிறீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு கணினி மற்றும் அந்த ஆண்ட்ராய்டு ஆப் உருவாக்குவதற்கான சாப்ட்வேர் போன்றவைகள் தேவைப்படுகின்றன.  இந்த கணனி மற்றும் சாப்ட்வேர் போன்றவைகளை நிறுவுவதற்கு நாம் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இந்த கிளவுட் கம்ப்யூட்டிங் தொழிநுட்பத்தை பயன்படுத்தி நமக்கு தேவையான ஹார்ட்வேர் ( Hardware ) மற்றும் சாப்ட்வேர் ( Software ) , ஸ்டோரேஜ் ( Storage ) போன்றவைகளை சுலபமாக  நமக்கு தேவையின் பொது குறைந்த செலவில் இணைத்தில் வாங்கி பயன்படுத்தி கொள்ளலாம். இதை கூகுள், ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கின்றன.
Read More