Thursday, February 21, 2019

தக்காளியைக் கொண்டு முக அழகு பெற..!


பெண்கள் அனைவரும் தற்காலதில் தனது அழகை வெளிப்படுத்திக் கட்டிக்கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடனும் போட்டியுடனும் இருந்து வருகின்றனர்.

ஒவ்வொருவரும் தன்னைவிட அழகானவர்கள் யாரும் இல்லை என மனதில் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

அவரவர் மனதில் அவரவர்களே கதாநாயகனாக, கதாநாயகியாக உருவகித்துக்கொண்டு வாழ்ந்துவருகிறோம். இது அனைவருக்கும் மனதில் இருக்கும் பொதுவான எண்ணங்கள் தான்.

இருப்பினும் சிலர் செயற்கை பொருட்களை கொண்டு தம்முடைய அழகை வெளிப்படுத்த பல முயற்சிகளை எடுத்து தோல்வியுற்று உடல் நலத்தை கெடுத்து கொள்கிறார்கள். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை..

இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகை மேம்படுத்த முடியும்.

நமது வீடுகளில் தினமும் சமையலுக்கு  இயற்கையாக பயன்படுத்தும் தக்காளியை கொண்டு முகத்தை பொலிவு பெற செய்ய முடியும்.

  • முதலில் தக்காளியை எடுத்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள் .அதனை முகத்தில் தேய்த்து கொண்டு ஒரு 10 நிமிடங்களுக்குக்கு பிறகு முகத்தை கழுவுங்கள். இப்படி தினமும் செய்வதன் மூலம் உங்கள் முகம் பொலிவு பெறுவதை  கண்கூடாகப் பார்க்கலாம். 
  • தக்காளியில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால் சரும ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டு, பல்வேறு பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வு கிடைக்கும். முகப்பருகள் அதிகம் உள்ளவர்கள் இந்த செயலை செய்வதன் மூலம் முகப்பரு பிரச்னைக்களில் இருந்தும்  விடுபடலாம்.
இப்படி இயற்கையான முறையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு நம்முடைய உடலழகைப் மேம்படுத்த மற்ற டிப்ஸ்களை  பின் வரும் பதிவுகளால் பார்க்கலாம் . நன்றி 


EmoticonEmoticon