Saturday, February 16, 2019

ஆல்ஃபபெட்டின் கீழ் வந்தது கூகுள் !


கூகுள் ஏன் ஆல்ஃபபெட் நிறுவனத்தின் கீழ் வந்தது ?


இன்றய டிஜிட்டல் உலகத்தில் நாம் மொபைல் போனோ அல்லது கணினியை கையில் எடுத்தவுடன் இணையத்தில் முதலில் நாம் டைப் செய்வது கூகுள்.காம் ஆகத்தான் இருக்கும் . தனி நிறுவனமாக இயங்கிவந்த கூகுள் தேடுதல் தளமாக தான்  ஆர்ப்பம்பிக்கப்பட்டது.அதன் பல வெற்றிகளுக்கு  பிறகு  பல முகங்களுக்கு தன்னை விரிவுப்படுத்திக் கொண்டது கூகுள். இப்படி மக்களிடையே மாற்றத்திற்கு பெயர் போன கூகுள் நிறுவனமானது தன்னை சீரமைப்பதற்காக மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது .

தற்போது எடுத்து இருக்கும் சீரமைப்பு பணியில் கூகுளின் இணை நிறுவனர்களான  லாரி பேஜ் மற்றும் செர்ஜி பின் இருவரும் ஆகஸ்ட் 2015 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டனர் . கூகுளின் தேடுதல் பிரிவு (Google Search Engine ) ஆனது ஆல்ஃபபெட் என்னும் தனது தாய் நிறுவனத்தின் கீழ்  இணைத்து கொள்ளும் என்றும் மற்ற கூகுளின் சேவைகள் அனைத்தும் தனித்தனியே ஆல்ஃபபெட் நிறுவனத்தின் கீழ் இயங்கும் என தெரிவித்தனர் .



ஆல்ஃபபெட் நிறுவனம் பல நிறுவனங்களை உள்ளடக்கிய நிறுவனமாக  செயல்படும் என்றும் கூகுளின் இணை நிறுவனர்களான  லாரி பேஜ் மற்றும் செர்ஜி பின் இருவரும் இதன் நிறுவகத்தை கவனிப்பார்கள் என்றும் . கூகுளின்  தேடுதல் சேவை மட்டுமின்றி கூகுளின் அணைத்து சேவைகளையும்  புதிய சிஇஓ சுந்தர் பிச்சை கவனிப்பார் என அறிவித்தனர்.





ஆல்ஃபபெட்டின்  அதிகாரப்பூர்வமான தளம் www.abc.xyz  இதுதான் . A முதல்  Z வரையிலான கூகுளின் அனைத்து நிறுவனங்களும் ஆல்ஃபபெட் (Alphabet) எனும் பெயரினுள் அடங்கும் என்பதை எடுத்துறைக்கும் வண்ணம் இந்த பெயரை தேர்வு செய்துள்ளது கூகுள் .


EmoticonEmoticon