Monday, February 18, 2019

வெள்ளாடு வளர்பதின் மூலம் நீங்களும் தொழிலதிபர் ஆகலம்


பொதுவாக நம்முடைய பொருளாதாரத்தை பார்க்கும் பொழுது கால்நடை வளர்ப்பு முக்கிய பங்கு வைக்கின்றன. இந்த கால்நடை வளர்ப்புகளை பார்க்கும் பொழுது வெள்ளாடு வளருப்பு மிகவும் சிரமம் இல்லாத ஒன்று. இந்த வெள்ளாடு வளர்ப்பதன் மூலம் நமக்கு இறைச்சி, பால், எரு ,தோல் போன்ற பொருட்களும் கிடைக்கின்றன.அதுமட்டும் இல்லமல் நம்ம கிராம புற மக்களுக்கு வெள்ள ஆடு வளர்ப்பது ஆண்டு முழுவதும் ஒரு சுய வேலை வாய்ப்பும் வருவாயும் கிடைக்கின்றன. அனாலும் நம்ம நாட்டுல பெரும்பாலும் வெள்ளாடுகளை இறைச்சிக்ககா தான்  வளர்கின்றனர்

இந்த வெள்ளாடுகளை  எந்தெந்த முறையில் வளர்க்கலாம் என்று பார்போம் :

சாதாரணமாக இந்த வெள்ளாடுகளை மூன்று முறைகளில் வளர்க்கலாம்:

1.மேச்சல் முறை

காலையில் இருந்து மலை வரை ஆடுகளை காடு,மேடு ,பள்ளம் போன்ற இயற்கையைன சூழல் நிறைந்த  இடங்களில் வளர்ப்பது தான் மேச்சல் முறை.

2.கொட்டகை முறை

ஆடுகளை கொட்டகையில் வைத்து அடைத்து அங்கேயே தீவனம்,தண்ணீர் போன்ற பொருட்களை கொடுப்பது வளர்ப்பது தான் கொட்டகை முறை.



3.மேச்சல் கலந்த கொட்டகை முறை

இந்த முறையில் சாதாரணமாக ஆடுகளை ஐந்து மணி நேரம் இயற்கையைன சூழல் நிறைந்த  இடங்களில் மேச்சலை முடித்துவிட்டு  அதன் பிறகு ஆடுகளை கொட்டகையில் வைத்து அடைத்து அங்கேயே தீவனம்,தண்ணீர் போன்ற பொருட்களை கொடுப்பது வளர்ப்பது தான் மேச்சல் கலந்த கொட்டகை முறை.



பொதுவாக ஆடுகளை வளர்ப்பதற்கு கொட்டகை முறை அல்லது மேச்சல் கலந்த கொட்டகை முறையே சிறந்தது.

தீவன மேலாண்மை :

வெள்ளாடுகளை இலாபகரமாக வளர்க்க தீவன மேலாண்மை மிக முக்கியமான ஒன்றாகும். 

சாதாரணமாக வெள்ளாடுகள் புல்,இலை,தழைகளையே  சாப்பிட்டு வளரும். 
மேய்ச்சலுக்கு புதர்ச்செடி / சிறுசெடிகளை தீவனபயிர்களை பராமரிக்க வேண்டும். ஆடுகளுக்கு எல்லா நேரங்களிலும் உப்பு கலந்த நீரை குட்டிகளுக்குத் தரலாம்.இனப்பெருக்க காலத்தின் போது, பெண் மற்றும் ஆண் ஆடுகளுக்கு கூடுதல் அடர்தீவனம் தரவேண்டும்.

நோய் தடுப்பு :

வெள்ளாடுகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் அருகில் உள்ள கால்நடை மருத்துவர் ஆலோசனையோடு  தகுந்த நோய் தடுப்பு , குடற்புழு மற்றும் புற ஒட்டுண்ணி நீக்கம் செய்ய வேண்டும்.

வெள்ளாடுகளை சந்தைப்படுத்துதல் :

சதைப்புள்ள, குண்டான குட்டி ஆடுகள், அதனுடைய புழுக்கை, வளர்ந்த ஆடுகளை விற்பனை செய்யலாம். ஆடு வெட்டுமிடம், தனிப்பட்ட இறைச்சி உண்ணும் நபர்கள் இருக்கும் இடங்கள், வேளாண் பண்ணை போன்ற இடங்களில் விற்கலாம். உயிருடன் உள்ள ஆடுகளை வாங்கும் வியாபாரிகள் உள்ள இடத்தில் விற்கலாம். விவசாய நிலங்களுக்கு ஆட்டின் புழுக்கையை அதிகளவில் பயன்படுத்தலாம். வெள்ளாடுகளை வளர்ப்பதன் அதிக இலாபம் 
இட்டமுடியும் மூலம் நீங்களும் தொழிலதிபர் ஆகலம். 


EmoticonEmoticon