Tuesday, February 19, 2019

காகித நகரங்கள் உருவான விதம்..!


மேப் எனப்படும் வரைபடங்களை உருவாக்குவது மிகவும் கடினமான செயலாளாகும். ஆரம்ப காலங்களில் அதாவது நாம் முன்னோர்கள் காலங்களில் ஒரு குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று பல நாட்கள் தாக்கி அங்கயே பல இடங்களை குறித்து அளந்து வரைபடங்களை உருவாக்கினர். இப்படி வரைபட உருவாக்கும் வல்லுநர்களால் உருவாக்கப்படும் வரைபடம் இனொருவரினால் கலவாடபட்டு  இலகுவாக ஒரு புதிய வரைபடங்கள் உருவாக்கப்பட்டு வெளியிடப்படும் நிலைகளும் காணப்பட்டன.

ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் உண்மையான வரைபடமும்  பிரதி எடுத்து போலியாக உருவாக்கப்படும் வரைபடமும் ஒரே மாதிரியாக  தான் இருக்கும். எனவே இவற்றிற்கு இடையேயுள்ள வேறுபாடுகளை கண்டறிவது மிகவும் கடினம்.

காகித நகரங்களா அப்படி என்றால் என்ன ?

அர்க்லேட்டோன் (Argleton) என்பது இங்கிலாந்தில் உள்ள ஒரு பிரேதசம். இந்த   இடத்தை கூகுள் மேப்பில் பார்த்தால் இது ஒரு நரகரம் என கூகுள் மேப் சொல்லும். ஆனால் உண்மையில் அந்த இடத்திற்கு சென்றால் அங்கே எந்த நகரமும் இருக்காது . 



போலியான நகரங்களை தங்கள் வரைபடத்தில் பதிவதன் மூலம் யாரும் தங்கள் வரைபடத்தை திருடி பிரதி செய்து உருவாக்கினால் அதனை சுலபமாக கண்டுபிடிக்க முடியும். இப்படி வரைபட திருட்டை தவிப்பதகர்க்கு சில வரைமுறையை உருவாக்கினறார்கள். இப்படி வரை படங்களை உருவாக்குனர்களால்  உருவாக்கப்பட்ட போலி நகரங்களே  Paper Towns எனப்படும் காகித நகரங்கள் என்று சொல்லப்படுகிறது.



இவ்வாறு  போலியாக உருவாக்கப்பட நரகங்கள் பின்னாளில் உண்மையான நகரங்களாக உருவெடுத்த சம்பவங்களும் உள்ளன .


நியூயர்க் (New York) லிலுள்ள அக்லோ (Agloe) என்ற காகித நகரம் தான். பின்னாளில் அந்த இடத்தில் திறக்கப்பட்ட வர்த்தக நிலையத்தின் பெயராகி அந்த போலி நகரம் உண்மையான நகரமாக உருவெடுத்தது.  


EmoticonEmoticon