Sunday, February 24, 2019

விளையாட்டு வீரர்களுக்கு உதவும் மாசுகளால் பாதிக்கப்படாத ஹெட்போன்..!


சோனி நிறுவனம் விளையாட்டு துறை சார்ந்தவர்களுக்கு பயன்பாட்டுக்கு உகந்த வயர்லெஸ்  ப்ளூடூத் ஹெட் போன் கருவியை அறிமுக படுத்தியுள்ளது இதன் எடை 32 கிராம் மட்டுமே. ஒருமுறை சார்ஜ் ஏற்றினால் 12 மணி நேரம் வரை இயங்க கூடியது. அதேபோல் விரைவில் சார்ஜ் ஏறக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது . 3 நிமிடம் சார்ஜ் ஏற்றினாலே 1 மணி நேரம் வரை இயங்கக்கூடியது. நீர் மற்றும் வெளிப்புற மாசுகளால் பாதிக்கப்படாது என்பதற்கான ஐபி65/ஐபி 68 சான்றிதழ் பெற்றுள்ளது. இதனால் இந்த ஹெட் போன்களை விளையாட்டு வீரர்கள் தாராளமாக வாங்கி பயன்படுத்தலாம்.அவர்கள் விளையாட்டு பயிற்சி எடுக்கும் போதும், விளையாடும் போதும் இந்த ஹெட் போன் எவ்வித பாதிப்பும் இன்றி இயங்க  கூடியவை.



இந்த ஹெட் போன் -5 டிகிரியிலிருந்த 45 டிகிரி வரையிலான வெப்ப நிலையை தாங்க கூடியது . இதனால் மலையேற்றம் குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா பயணம் என்று செல்பவர்களுக்கு இந்தவகை ஹெட் போன்கள் பயனளிக்க கூடியவை. விலை ரூ.8,990

இந்த ஹெட் போனின் பெயர்  Sony Walkman NW-WS623


EmoticonEmoticon