Sunday, February 24, 2019

இனி வெயில் காலம் வெயிலை சமாளிக்க சில வழிகள்



நாம் இன்று வெயிலை  எவ்வாறு சமாளிக்கலாம் என்று பார்க்கலாம் வெயில் காலம் ஆரம்பித்தது விட்டன. பொதுவாக தமிழகத்தின் பல மாவட்டங்களில்  வெயிலின் தாக்கம் இனி அதிகமாக இருக்கும்.

 உடல் சூட்டை குறைக்க சில வழிமுறைகள் :

தண்ணீர் 

கோடைகாலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக பலருக்கும் அடிக்கடி உடல் சூடு பிடித்துக்கொள்ளும்.
பொதுவாக நாம் வெயில் காலங்களில் வெளியே செல்லும் பொது வெயிலின் தாக்கத்தினால் தலை சுற்றல், வாந்தி, மயக்கம், வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் எற்படும். இதற்கு சில வழிமுறைகள் உள்ளன  வெயில் காலங்களில் வீட்டில் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு வட்டவடிவ அகன்ற பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவற்றில் தண்ணிரை ஊற்றி  உங்கள் கால்கள் இரண்டியும்  அந்த பாத்திரத்தினுள் சிறிது நேரம் வைத்திருந்து எடுக்க வேண்டும்


முடிந்த அளவு அதிக தண்ணிரை குடிடுப்பது நல்லது . பானை குடிநீரியென்றால் நன்றக இருக்கும்.  இப்படி செய்வதின் மூலம் உங்கள் உடல் சூடு தனியும்.

மாதுளை ஜூஸ்

கோடைகாலத்தில் தினமும் ஒரு டம்பளர்  மாதுளை ஜூஸ் குடிப்பதினால் உடலில் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தை குறைக்கலாம்.


வெந்தையம் 

இது பலரும் அறிந்த முறையே தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை எடுத்துக்கொண்டு வாயில் போட்டுக்கொடு தண்ணீர் குடிக்க வேண்டும் இப்படி தினமும் செய்வதனால் உடலில் வெப்பத்தை குறைக்க முடியும்.



வைட்டமின் சி நிறைந்த உணவுகள் 

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த பொருட்களோ அல்லது பழங்களையோ சாப்பிடுவது அல்லது ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் உடல் வெப்பத்தை குறைக்க முடியும்.



மோர்

கோடைகாலங்களில் மோர் சாப்பிடவதன் மூலம் உடலில் உஷ்ணத்தை குறைக்கும். உடல் சோர்வை போக்கவும் பயன்படுகிறது .உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. கோடைகாலங்களில் மோர் சிறந்த பானமாக குடித்து  வெயிலில் இருந்து நம் உடல்நலத்தை  பாதுகாத்து கொள்ளலாம்.



இளநீர் 

கோடைகாலங்களில் தினமும் இளநீர் பருகுவதன் மூலம் உடலுக்கு புத்துணர்ச்சி எற்படும்.உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.உடல் வெப்பத்தை தனிக்க முடியும்.



சோம்பு நீர்

இரவில் தூங்க போகும் முன் ஒரு கைப்பிடி அளவு சோம்பை  எடுத்து ஒரு டம்பளரில் நீரை ஊற்றி ஊறவைக்க வேண்டும்..பிறகு காலையில் எழுந்து நீரை வடிகட்டி குடிக்க வேண்டும் இப்படி தினமும் குடிப்பதன் மூலம் உடல் வெப்பம் குறையும்.



கற்றாழை 

வெயில் காலங்களில் கற்றாழையின் ஜெல்லை எடுத்து தினமும் முகத்தில் பூசி சிறுது நேரம் கழித்து கழுவ வேண்டும் இப்படி செய்வதின் மூலம் உடல் சூடு குறையும் .வெயிலில்  சருமத்தை பாதுகாக்க முடியும்.முகம் பொலிவுடன் காணப்படும்.



கரும்பு ஜூஸ் 

கோடைகாலங்களில்  அதிகமா அனைத்து  இடங்களில் பொதுவாக இது விற்கப்படும்.இந்த கரும்பு ஜூஸ் குடிப்பதன் மூலம் வெயில் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.



EmoticonEmoticon