Wednesday, February 27, 2019

கூகுள் விளம்பர சேவையின் மூலம் பணம் சம்பாதிப்பது ஏப்படி ?



கூகுளின் விளம்பர சேவையின் மூலம் கூகுளின் தனது விளம்பர வருவாயை தனது விளம்பரங்களை காட்டும் வெப்சைட் அல்லது பிளாக்கர் தளங்கள் வைத்திருப்பவர்களுடன் பகிர்ந்தளிக்கிறது அதாவது கிட்டத்தட்ட 50 சதவீத வருவாயை பகிர்ந்துகொள்கிறது.

இந்த சேவையில் நாம் இணைய தேவையானது ?

சொந்தமாக வெப்சைட் அல்லது பிளாக்கர் அதில் உள்ள பக்கங்கள் கூகுளில் கூறி உள்ளவாறு அதிக தகவல்களுடனும் தனித்தன்மையோடும் இருக்க வேண்டும்.

ஒரு மெயில் ஐடி அல்லது ஏதெனும் ஒரு ஈமெயில் ஐடி இருந்தால் மட்டும் போதும் தற்சமயம் கூகுள் தமிழில் உள்ள வெப்சைட் பிளாக்கர் தளங்களுக்கு விளம்பரம் செய்ய அனுமதி அளித்துள்ளது எனவே நாம் நமது மொழிலே இணைய தளங்களை தொடக்கி கூகுளின் விளம்பர சேவையின் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். பிளாக்கர் தளங்களை உருவாக்குவது எளிது மற்றும் இலவசம் ஆனால் வெப்சைட் தொடங்க சில ஆயிரங்கள் செலவாகும்.

எப்படி விண்ணப்பிப்பது ?


இங்கே சென்று உங்களின் தகவல்களை பதிவு செய்ய வேண்டும். உங்கள் வெப்சைட் அல்லது பிளாக்கரின் முகவரியை உள்ளீடு செய்ய வேண்டும்.பதிவு செய்தவுடன் சில நாட்கள் அல்லது சில வாரங்களில் உங்கள் வெப்சைட் அல்லது பிளாக்கரனது கூகிள் கூறியுள்ளவாறு  நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளதா என பரிசோதித்து கூகிள் விளம்பரங்களை உங்கள் வெப் தளத்தில் காட்ட அனுமதி வழங்கும்.

அப்படி அனுமதி கிடைத்ததும் உங்கள் Adsense தளத்திற்கு சென்று லாகின் செய்து கூகிள் தரக்கூடிய விளம்பர கோடை (Code)  உங்கள் வெப்சைட் அல்லது பிளாக்கரில் இணைக்கலாம். சில மணி நேரங்களில் உங்கள்  வெப்சைட்டில் கூகுள் விளம்பரங்கள் காட்ட துவங்கி விடும்.


உங்கள் வெப்சைட்டில் அதிகமாக பார்க்கப்படும் விளம்பரங்கள் மற்றும் அதிகமாக கிளிக் செய்து பார்க்கப்பட்ட விளம்பரங்கள் என கூகுள் உங்கள் கணக்கில் பணத்தை வரவைக்கும் உங்கள் கணக்கில் 100 அமெரிக்கா டாலர் சேர்ந்தவுடன் நீங்கள் அதை வாங்கியின் மூலமாகவோ அல்லது காசோலையின் வாயிலாக கூகுள் உங்களுக்கு பணத்தை அனுப்பிவைக்கும்.

உங்கள் தளத்தில் விளம்பரங்களை பார்ப்பவர் மற்றும் கிளிக் செய்பவர் எத்தனை பேர் மற்றும் எந்த நாட்டில் இருந்து பார்க்கின்றனர் என்ற விவரங்கள் அனைத்தும் கூகுளின் ரிபோர்ட்ஸ் மூலம் பார்த்துக்கொள்ளலாம்.

பின்பற்ற வேண்டியவை ? 

உங்கள் விளம்பரங்களை நீங்களே கிளிக் செய்ய கூடாது. மற்றவர்கிளிடம் கூறி கிளிக் பண்ணுமாறு செய்ய கூடாது. இப்படி தவறான செயல்களை செய்யும் பொது உங்கள் அக்கவுண்ட் நீக்கப்பட்டு விடும்.

நேர்மையாக நடந்து கொண்டால் நீங்களும் கூகுளின் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கலாம்.


EmoticonEmoticon