Sunday, February 17, 2019

இணையத்தில் பாஸ்வேர்டுகளை பாதுகாக்க கூகுளின் புதிய தொழில்நுட்பம் ..!


பொதுவாக இணையத்தில் வங்கி கணக்குகள், இ-மெயில் மற்றும் சமூகவலைத்தள  பாஸ்வேர்டுகளை ஹேக் செய்யப்பட்டு திருடுவது தொடர்கதையாகத்தான் இருக்கிறது. போலியான இணைய தளங்களில் பொருட்களை வாங்குவது விற்பது போன்ற ஆன்லைன் வர்த்தகம் செய்யும்போது பாஸ்வேர்டு  மற்றும் வங்கி கணக்குகள்  திருடப்படுகின்றன. ஆன்லைன் பண மோசடி போன்ற நிகழ்வுகளும் நடக்கின்றன .

இந்நிலையில் கூகுள் ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுக படுத்தியுள்ளது இணைய பாஸ்வேர்டுகள் ஹேக் செய்யப்படுகிறதா என்பதை அறிய  பாஸ்வேர்ட் செக் அப் எஸ்ட்டென்ஷன் (Password Checkup Extension) என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது .


பாஸ்வேர்ட் செக் அப் எஸ்ட்டென்ஷன் சிறப்பு :

கூகுள் க்ரோமை பயன்படுத்தும் பயனர்கள் க்ரோம் ஸ்டோரில் சென்று  பாஸ்வேர்ட் செக் அப் எஸ்ட்டென்ஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணைய தளத்தில் பாஸ்வேர்டை டைப் செய்யும்போது பாஸ்வேர்டு ஹேக் செய்யப்பட்டால் உடனடியாக இந்த எஸ்ட்டென்ஷன் எச்சரிக்கை நோட்டிபிகேஷனை பயனருக்கு அனுப்பும். இந்த எச்சரிக்கையின் முலம் பயனர்கள் சுதாரித்துக்கொள்ளலாம் எனவும் இணைய பாஸ்வேர்டு திருட்டுகளில் இருந்து தப்பித்துக் கொள்ள உதவும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது .


EmoticonEmoticon