Tuesday, March 12, 2019

அறிவியலால் பதில் சொல்ல முடியாத 10 கேள்விகள் என்ன ?


எத்தனையோ தொழிநுட்பங்கள் வந்தும் புது புது ஆராட்சிகள் செய்து எத்தனையோ புது விடையங்களை கண்டுபிடித்தாலும் அறிவியலாளால் பதில் சொல்ல முடியாத சில கேள்விகள் உள்ளன இப்படி அறிவியலால் பதில் சொல்ல முடியாத 10 கேள்விகள் என்ன ? என்பதை பற்றி பார்ப்போம்.


1. கடவுள் இருக்கறா இல்லையா ?



அறிவியலின்  கூற்றின் படி 13.7 பில்லியன் வருடங்களுக்கு முன் உலகம் உருவாக்கப்பட்டு இருக்கு ஆனால் இதுவரைக்கும் உலகம் எப்படி உருவாகின எதற்காக உருவகக் பட்டது என எந்த அறிவியலாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதில் கடவுள் இருக்கறா இல்லையா என எந்த அறிவியலும் பதில் சொல்ல முடியவில்லை.


2. நினைவுகள் எப்படி சேமிக்கபடுத்து எப்படி பெறப்படுது ?



ஒரு புது  விடையங்களை கேட்கும் போது சில மாற்றங்கள் ஏற்படுகின்றன நரம்பியல் நிபுணர்கள் பலவிதமான ஆராட்சிகள் செய்தும் கூட இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை.


3. நாம் ஏன் கனவு காண்கிறோம் ?



ஆரம்ப காலங்களில் மக்கள் கனவு காண்பதை கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள தொடர்பாக கருதினர். சில காலங்களுக்கு பிறகு ஆழ் மனதின் பிரதிபலிப்பு என சொல்லபட்டது ஆனாலும் நாம் தூங்கும் போது புது உருவங்கள் வந்து போகும் இதற்கான கேள்வி பதில் காணபடாததாகவே இருக்கு.

4. ஏன் நாம் கொட்டாவி விடுகின்றோம் ?





சராசரியாக மனிதன் அவர்களது வாழ்நாளில் 2 இலட்சத்து ஐம்பதாயிரம் வரை கொட்டாவி விடுகின்றனர். ஆனால் ஆராட்சியாளர்கள் இந்த பொதுவான நிர்பந்தத்திற்கு பதில் சொல்ல முடியாத நிலையில் உள்ளார். நம் முன்னோர்கள் கொட்டாவி விடுவதை ஒரு தொடர்பு அறிகுறிகளாக பார்த்து இருக்கின்றனர் ஆனால் அதையும் நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை.


5. பிரபஞ்சம் எதனால் உருவானது ?





5 % சதவிகிதம் ஆட்டம்ஸ் தான் பிரபஞ்சம் உருவாக்க காரணம் என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர் .ஆனால் மீதமுள்ள 95 % சதவிகிதமும் எதனால் ஆனது என்று எந்த அறிவியல் அறிஞர்களையும் பதிலளிக்க முடியவில்லை. 


6. நாம் இறந்த பின் என்ன நடக்கும் ?



ஆராட்ச்சியாளர்கள் சொன்னபடி மரணம் இரண்டு விதம் ஒன்று கிளினிக்கல் டெத் மற்றொன்று பயோலொஜிக்கல் டெத் . கிளினிக்கல் டெத் என்பது இதய துடிப்பு நின்று இறப்பது. பயோலொஜிக்கல் டெத் என்பது இதயத்திற்கு முன்னாடி மற்ற உறுப்புகள் செயலிழந்து இறப்பது. ஆனால் இறந்த பிறகு என்ன நடக்கும் என்பது யாருக்குமே பதில் தெரியாத ஒரு கேள்வி ?


7. 200 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எழுவோமா ?



கிரியானிக் ப்ரெசெர்வசன் ( cryonic preservation ) பன்ன முடியுமா என்பது அறிவியலுக்கு பலவருடங்களாக சவாலாகவே உள்ளது.மனித உடலை மிக குறைந்த வெப்பநிலையில் வைத்திருக்கும் போது எதிர்கால மருத்துவ தொழில்நுட்பம் அதை ஒரு நாள் பயன்படுத்தும் என கூறியிருக்கிறார்கள் .இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்றும் இதற்கான பதிலும் சொல்லப்படாமல் இருக்கு.

8. பிளாக் ஹோலின் கீழே என்ன இருக்கு ?



பிளாக் ஹோல்களுக்கு புவி ஈர்ப்பு தன்மை அதிகம் வானியல் ஆராட்சியாளர்களுக்கு எவ்வளவு புத்தி கூர்மை இருந்தாலும்  பிளாக் ஹோலின் கீழே என்ன இருக்கு என்று தெரியாமல் தான் இருக்கிறார்கள்.சில ஆராச்சியாளர்கள் பிளாக் ஹோல் அடுத்து இருக்கும் கிரகங்களுக்கு  வழி என்று கூறி இருக்கிறார்கள் ஆனால் எந்தவொரு தியரியும் அதை நிரூபிக்க முடிய வில்லை அதனால் இதும் ஒரு விடையில்லா கேள்வியாக இருக்கு.


9. பேய்கள் இருக்க ?



நம் உலகத்தின் பேய்கள் இருக்கு என்று பல நூற்றாண்டுகளாக சொல்லப்படுகின்றன. ஆயிரக்கணக்காக போட்டோக்கள் மற்றும் விடீயோக்கள் பேய் இருக்கு என்று சொல்லும் விதமாக இருந்தாலும் இன்னும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க படவில்லை.

10. பிளாஸோபா எபெக்ட் ( Placebo effect ) எப்படி வேலை செய்யும் ?



இது மருத்துவர்களால் கையாளப்படும் பொய்யான சிகிச்சை முறை.இவை நோயளிகளின் உடல் நிலைகளில் நல்ல மாற்றத்தை தரும் என நம்பப்படுகிறது . கடந்த 25 ஆண்டுகளாக வலி மாத்திரையை வைத்து சோதனை செய்து இருக்கிறார்கள் இது குணப்படுத்தும் தன்மையை அதிகப்படுத்தும் என சொல்லப்படுகிறது ஆனால் இதை விளக்க எந்த தியரியும் இல்லாததால் விடை தெரியாத கேள்விகளில் ஒன்றாக இருக்கு.



இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் ஷேர் செய்யவும் நன்றி.



EmoticonEmoticon