Friday, March 1, 2019

ஒரு ரூபாய் திட்டம் எப்படி சாத்தியம் ?


நம்ம கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்யாமல் கொஞ்சமாவது சேமித்து வைக்க வேண்டும் என்பது தான் எல்லாருடைய மனதில் இருக்கும் ஆசை . ஆனால் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே தான் இருக்கும் ஆனால் நாமும் கொஞ்சம் முயற்சி செய்தல் இது சாத்தியம்  இதற்குத்தான் இந்த ஒரு ரூபாய் திட்டம். எப்படி ? சத்தியம் என்று நினைக்கிறீர்களா ?  என்பதை பற்றி  பாப்போம்.

தினமும் நீங்கள் 1 ரூபாய் சேமித்தல் ஒரு வருடத்தில் 66,795 ரூபாய் நம்மால் சேமித்து வைக்க முடியும்.

இந்த ஒரு ரூபாய் திட்டம்  எப்படி செயல்படும் ?

இந்த ஒரு ரூபாய் திட்டத்தில் தினமும் ஒரு ரூபாயில் இருந்து ஆரம்பித்து 1 ரூபாய், 2 ரூபாய் என எடுத்து வைத்து கொண்டே இருக்க வேண்டும்.

உதாரணமாக 

நாள் =  1 ரூபாய்
நாள்=  2 ரூபாய்
நாள்= 3 ரூபாய்
நாள்= 4 ரூபாய்
நாள்= 5 ரூபாய்
100 நாள் = 100 ரூபாய்
300 நாள் = 300 ரூபாய்

இப்படியே எத்தனாவது நாளோ அதற்கு ஏற்றார் போல் பணத்தை எடுத்து வைத்து கொண்டிருங்கள் . வருடத்தின் இறுதி நாள் அதாவது 365 நாள் அன்று உங்கள் கையில் 66,795 ரூபாய் முழுமையாக இருக்கும்.

கவனிக்க வேண்டியவை ?

மாத சம்பளத்திற்கு வேளைக்கு செல்பவர்களுக்கு இந்த திட்டம் ஒரு  100 நாட்கள் வரை கொஞ்சம் சுலபமாக இருக்கும் அதற்குமேல் தினமும் 100 ரூபாய்க்கு மேலே தனியாக எடுத்து சேமித்து வைப்பது என்பது ரொம்பவே  கடினம் அதற்கும் ஒரு சுலபமான வழி ஒன்று உள்ளது. கீழே கொடுக்கப்பட்ட டவுன்லோட் லிங்கில் ஒரு எஸ்ச்ல் சார்ட் ஒன்று உள்ளது அதை டவுன்லோட் செய்து பிரிண்ட் செய்து வைத்து கொள்ளுங்கள்.




நீங்கள் சேமித்து ஆரம்பித்த உடனே சின்ன அமௌன்ட் ஆனா 1 ரூபாய் , 2 ரூபாய் இருந்து ஆரம்பிக்க வேண்டாம். மாத கடைசியில் கையில் பணம் இல்லாத பொது அந்த பணத்தை போட்டுக்கொள்ளலாம். சம்பளம் வாங்கும் பொது பெரிய அமௌன்டை டிக் செய்து சேமித்து வைய்யுங்கள். உங்களுக்கு ஏதவாது ஒரு சூழ்நிலையில் ஒரு 500 அல்லது 1000 ரூபாய் கிடைக்கின்றது என்றால் அதையும் டிக் செய்து சேமித்து வையுங்கள் .

உதாரணமாக ஒரு 500 ரூபாய் கிடைக்கிறது என்றல் 300 வது நாள் ஒரு டிக்கும் 200 வது நாள் ஒரு டிக்கும் போட்டு சேமித்து வைய்யுங்கள் இப்படி நீங்கள் சேமித்து வைக்கும் பணத்தை நீங்கள் டவுன்லோட் செய்த சர்ட்டில் டிக் செய்து கொண்டே சேமித்து வந்தால் 1 வருடத்தில் சுலபமாக  உங்களால்  66,795 ரூபாய் சேமிக்க முடியும்.

உங்கள் பிறந்த நாள் ,  தீபாவளி , பொங்கல் போன்ற நல்ல நாட்களிளின் பொது உங்களுக்கு கிடைக்கும் பணத்தை டிக் செய்து  யோசிக்காமல் சேமித்து வைய்யுங்கள். நீங்கள் சேமித்து வைக்கும் பணத்தை சுலபமாக எடுக்கும் வகையில் சேமித்து வைக்காதீர்கள் .அப்போது தான் அந்த பணத்தை எடுக்காமல் இருப்பிர்கள்.

கடைசியில் கிடைக்கும் இந்த 66,795 ரூபாய் பணத்தை நீங்கள் அசைபடமாதிரி செலவு செய்ய முடியும் .ஒரு பைக் வாங்கலாம் , அம்மா அப்பா விற்கு ஏதவாது வாங்கி கொடுக்கலாம் , உங்கள் குழந்தைகளின் படிப்பு செலவிற்கு பயன்படுத்தலாம். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். முடிந்த வரை சேமித்து வைத்து கொள்ள கற்றுக்கொள்ளுங்கள் . பணம் மட்டுமல்ல அன்றாட வாழ்வில் உங்கள் உறவினர்களின் அன்பையும் கூட .. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் . நன்றி 


EmoticonEmoticon