Sunday, March 3, 2019

நல்ல லாபம் தரும் நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள்.!


நம் முன்னோர்களின் தொன்று தொட்டு பின்பற்றப்பட்டு  வரும் தொழில்களில் ஒன்று நாட்டு கோழி வளர்ப்பு தொழிலாகும். பெரும்பாலான கிராம மக்கள் நாட்டுக்கோழி வளர்ப்பதை ஒரு பொழுது போக்கு தொழிலாகவும் மக்களின் அன்றாட இறைச்சி மற்றும் முட்டையின் தேவையை ஒரளவு பூர்த்தி செய்யும் ஒரு தொழிலாக பயன்படுத்தி வருகிறார்கள் .

நாட்டுக்கோழிகளில் இருந்து பெறப்படும் முட்டை மட்டும் இறைச்சியின் அளவானது வீரிய இனக்கோழிகளில் இருந்து பெறப்படும் முட்டை மற்றும் இறைச்சியின் அளவை விட மிக குறைவாக இருப்பதால் கடந்த காலங்களில் நாட்டுக்கோழிகளின் முக்கியத்துவம் குறைந்து காணப்பட்டது ஆனால் வீரிய முட்டை மற்றும் இறைச்சி கோழி இனங்கள் அதிக நோய் தாக்குதலுக்கு உள்ளாவதால் அவற்றிக்கு அதிக எணிக்கையிலான தடுப்பூசிகளும் மருந்துகளும் அளிக்க வேண்டியுள்ளது மேலும் பண்ணையில் அடைத்து வளர்ப்பதால் அவற்றிற்கு சிறந்த பண்ணை வசதியும் சரிவிகித சத்துக்கள் நிறைந்த தீவனமும் அளிக்க வேண்டியுள்ளது.

ஆகவே இத்தகைய முட்டை மற்றும் இறைச்சி கோழி வளர்ப்பிற்கு அதிக மூலதனம் தேவை படுகிறது . ஆதலால் இத் தொழில்களை புதிதாக தொடங்க நடுத்தர மற்றும் குறைந்த வருவையுடைய மக்களால் இயலவில்லை . இது தவிர பண்ணைகளில் கோழிகளில் பராமரிப்பதற்காக வேலைட்களை அமர்த்த வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஆனால் நாட்டு கோழிகளை  வீட்டில் உள்ள பெண்களும்,முதியவர்களும், குழந்தைகளும் கூட ஆர்வத்துடன் வளர்ப்பதால் ப்ரேதேகமாக வேலை ஆட்களை அமர்த்த தேவையில்லை . மேலும் பண்ணை கோழிகளை வளர்க்க ஓரளவு அறிவியல் அறிவும் ஈடுபடும் தேவைப்படுகிறது ஆனால் நாட்டுக்கோழிகளை வளர்க்க அதிக அளவு விஞ்ஞான அடிப்படை  அறிவு தேவைப்படாத காரணத்தால் அனைவராலும் குறிப்பாக கிராமப்புற படிப்பறிவு இல்லாத மக்கள் கூட இத்தொழிலை எளிதாக செய்ய இயலும்.

வீரிய இனக்கோழிகளை ஒப்பிடும்போது நமது நாட்டு இனக்கோழிகள் குறைந்த அளவு முட்டை மற்றும் இறைச்சியை உற்பத்தி செய்யும் பன்பை பெற்றிருந்தாலும் இதர நற்பண்புகளான அதிக நோய் எதிர்ப்பு திறன் ,முட்டைகளை அடைகாக்கும் திறன் , குஞ்சிகளை பராமரித்து பாதுகாக்கும் திறன் , எதிரிகளிடம் இருந்து தப்பி தன்னையும் தன் குஞ்சிகளையும் பாதுகாக்கும் திறன் , எத்தகைய தற்ப வெப்ப சூழ்நிலைகளிலும் வளரும் திறன் , கொள்ளை புற கழிவு பொருட்களை உண்டு  வளரும் திறகளை கொண்டுள்ளன மேலும் நாட்டுக்கோழிகள் நெரிசலை தங்கும் குணம் கொண்டவை அனால் வீரிய இனக்கோழிகள் நெரிசலை தாங்க இயலாத  காரணத்தால் பண்ணையில் ஏதாவது ஒரு காரணத்தால் கோழிகள் ஒன்றாக மூலைக்கு சென்று நெரிசல் ஏற்பட்டால் மூச்சி திணறி இறந்துவிடும் .

விரிய இனக்கோழிகள் அதிக வெப்ப காலங்களில் வெப்ப அயற்சியால் இறக்கின்றன ஆனால் இந்த இறப்பு நாட்டுக்கோழிகளில் காணப்படுவதில்லை.நாட்டுக்கோழி முட்டைகள் வெள்ளையும் பழுப்பும் கலந்த நிறத்துடன் அவற்றின் மஞ்சள் கரு அடர் மஞ்சள் நிறத்துடன் காணப்படும் .

நாட்டுக்கோழிகளின் வகைகள் :

பல்வேறு நிறங்களில் நாட்டுக்கோழிகள் காணபட்டாலும் அவற்றின் நான்கு முக்கிய இனங்கள் இந்தியாவில் இருப்பதாக கண்டறிய பட்டுள்ளது அவை
1. அசீல் , 2.கடக்நாத் , 3.பஸ்ரா ,4.சிட்டகாங் என்பனவாம். மற்றும் இதர கோழி இனங்கள் உள்ளன

இவற்றில் அசீல் கோழி இனங்களின் சேவல்களை சண்டை  கோழிகளாலாக மக்கள் பயன்படுத்துகிறார்கள் இக்கோழிகளின் நிமிர்ந்த நடை மற்றும் உடலமைப்பு அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. இவற்றிற்கு இயற்கையாகவே சண்டையிடும் பண்பு இருப்பதால் புதிதாக எந்தவொரு அன்னிய சேவலும் தன் எல்லையில் வரும்போது அவை சண்டையிட்டு துரத்துகின்றன

நாட்டு கோழிகளின் வீட்டமைப்பு :

பண்ணை கோழிகளுக்கு அளிக்கப்படும் கொட்டகை போன்றவை நாட்டுக்கோழிகளுக்கு அமைக்க தேவையில்லை அதனால் அவற்றிற்கான முதலீடும் மிக குறைவாகும். ஆனால் நாட்டுக்கோழிகளை இயற்கை சீற்றங்களில் இருந்தும் எதிரி விலங்கு மற்றும் பறவைகளிடம் இருந்தும் பாதுகாக்க சிறிய கோழி கூடு தேவைப்படுகிறது.  கிரமங்களில் பெரும்பாலான இடங்களில் கோழிகளின் இரவில் அருகிலுள்ள மரக்கிளைகளில் தங்குகின்றன ஆனால் இத்தகைய கோழிகள் மழைக் காலங்களில் மலையில் நனைவதுடன் எதிரி விலங்குகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.இதற்காக சில எளிய கூடு அமைப்புகள் வளர் இடத்திற்கு அருகிலேயே அமைத்தல் நல்லது இது இரவில் கோழிகளை பாதுகாக்க பயன்படுகிறது இவற்றை எளிய மரபலகைகள் , மண் , செங்கற்களால் ஆன கூடுகளாக உருவாக்கலாம் 

இரண்டு அல்லது மூன்று கோழிகளை வளர்த்தல் மூங்கிலில் ஆனா கோழி கூட்டினை பயன் படுத்தலாம் ஆனால் கோழிகள் ஆரோக்கியமாக இருக்க போதிய காற்றோட்டம் தேவைப்படுவதிலும் , அடை கோழிகளை தொந்தரவு இன்றி பாதுகாக்கவும் சிறிய அளவிலான குறைந்த முதலீட்டில் பண்ணையை நம் வாழ்விடத்திற்கு அருகில் அமைக்க வேண்டும் 

நாட்டுக்கோழிகளுக்கான தீவனம் :

மேச்சலினால் வளர்க்கப்டும் நாட்டுக்கோழிகளுக்கு போதுமான சத்துக்கள் நிறைந்த தானியங்கள் கிடைப்பதில்லை எனவே அதிக அளவு முட்டையும் இறைச்சியும் பெற இயலுவதில்லை எனவே ஒரு சில எளிய வழிகளை பின்பற்றினால் நம்முடைய நாட்டுக்கோழிகள் அதிக அளவு உடல் எடையை அடைவதுடன் அதிக அளவு முட்டைகளையும் பெறமுடியம்.

கோழிகளின் உடல் வளர்ச்சிக்கு முக்கியமாக தேவைப்படுவது புரத சத்தாகும் இது பொதுவாக புறக்கடையில் வழக்கப்படும் நாட்டுக்கோழிகளுக்கு கிடைப்பதில்லை எனவே அவை உடல் எடையை விரைவில் அடைவதில்லை பண்ணைக்கோழிகளுக்கு புரத தேவையை பூர்த்தி செய்ய சோயா ,கடலை பிண்ணாக்கு மற்றும் மீன் தோல் அளிக்கப்படுகிறது ஆனால் இவற்றின் விலை அதிகமாக இருப்பதால் சாதாரண ஏழை மக்கள் இவற்றை தொடர்ச்சியாக அளிக்க இயலாது 

இந்த சூழ்நிலையில் விட்டு பயன்பட்டு கழிவுகளான மீன் மற்றும் இறைச்சி கழிவுகள் மண் புழு மற்றும் கரையான் போன்றவற்றை அளிக்கலாம்.குறைந்த விலையில் கிடைக்கும்  பிண்ணாக்கு மற்றும் மீன் கருவட்டு கழிவுகளை  அளிக்கலாம் முட்டையிடும் கோழிகளுக்கு அதிக அளவு சுண்ணாம்பு சத்துக்கள் தேவைப்படுவதால் தனியாக ஒரு பாத்திரத்தில் சுண்ணாம்பு கிளிஞ்சல்களை போட்டு வைத்தால் முட்டையிடும் கோழிகள் அவற்றை உண்ணும் இதன் மூலம் அதிக அளவு முட்டைகளை பெறுவதுடன் ஓடு இல்லாத தோல் முட்டைகளை இடப்படுவதையும் தடுக்கலாம்.

விவசாயிகள் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதுடன் மட்டுமல்லாமல் எங்கு நேரடியாக விற்பனை செய்தல் அதிக லாபம் கிடைக்கும் என்பதை அறிந்து அதன் படி விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபம் பெற  முடியும். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் ஷேர் செய்யவும் .நன்றி 


EmoticonEmoticon