Friday, March 8, 2019

மதுரையில் தொடக்கி கலிபோர்னியாவில் முடிந்த கதை..!
2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 நாள் கூகுள் இந்த உலகமே வியந்து போகும் அளவிற்கு நிர்வாகத்தின் புது சி.இ.ஓ பதவியை அறிவித்தது. இந்திய சமுதாயத்தில் இது ஒரு பெருமிதம் கொண்ட தருணமாக அமைய உலகமெங்கும் இலட்ச்சகணக்கானோர் சேர விரும்பும் ஒரு நிறுவனத்திற்கு ஒரு இந்திய பிறப்பு அந்த நிர்வாகத்தின்   சி.இ.ஓ ஆனது மிக சிறந்த சம்பவமாக இருந்தது நாம் தமிழகத்தின் சுந்தர் பிச்சை எல்லா போராட்டங்களையும் கடந்து முன்னேறி இருக்கிறார் இது தான் அவரது வாழ்கை பயணம்.

சுந்தர் பிச்சை என பொதுவாக அழைக்கப்படும் பிச்சை சுந்தரராஜன் ஜூலை 12 - 1972 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் பிறந்தார் அவர் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தை சார்ந்தவர். அவருடைய குழந்தை பருவத்திலிருந்தே தொலைக்காட்சியை பார்ப்பது அல்லது கார் மூலம் பயணிப்பது போன்ற ஆடம்பரங்களை அனுபவித்தது இல்லை. இருப்பினும் 12 வயதில் பிச்சையின் தந்தை தன் இல்லத்திற்கான தொலைபேசியை வாங்கி வந்த பொது முதல் முறையாக தொழில்நுட்பத்திற்கு அறிமுகமானார்.

அவர் நினைவில் வைத்துக்கொள்ளும் மற்றும் எண்களை நினைவு படுத்துவதில்  ஒரு குறிப்பிட்ட திறனை  பெற்றிருந்தார் .டைல் செய்யும் அனைத்து எண்களையும் நினைவில் வைத்து கொள்ளும் திறன் அவரது பலமாக அமைந்தது. சுந்தர் பள்ளிக்கூடங்களில் நன்றாக விளங்கியதால்  இந்தியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கரக்பூரில்  , பொருள் அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் சுலபமாக நுழைந்தார். பட்டம் பெற்ற பிறகு 1993 ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். 

மேற்படிப்பில் படிப்பதுதான் அவரது திட்டமாக இருந்தது எனினும் இத்திட்டத்தை கைவிட்டு சிலிகான் வேலியில் இருந்த ஆஃப்லைடு மெட்டீரியல் என்னும் ஒரு செமிகண்டக்டர் தயாரிக்கும் நிறுவனத்தில் ஒரு பொறியாளராகவும் தயாரிப்பு மேலாளராகவும் பணிபுரிய தொடங்கினர் இதுவும் நீண்டகாலம் தொடராமல் வேலையில் இருந்து விளக்கினார்.

பின்  2002 யில் பென்சில்வேனியா ( Wharton School of the University ) பல்கலை கழகத்தில் அவரது முதுகலை பட்டத்தை முடித்தார். பிறகு அங்குள்ள மெக்னிசியன் நிறுவனத்தின் முகாமைத்துவ ஆலோசகராக நியமிக்கப்பட்டார் சுந்தர் பிச்சை தனது தனிமையான நாட்களை கடந்து கொண்டு வெற்றி பாதையில் வழிநடக்க அப்போது அவரது காதலி மற்றும்  இன்றைய அவரது மனைவியான அஞ்சலியின் ஆதரவது அனைத்து சாதனைகளிலும் முக்கிய காரணம் இவர்தான் என  பலரும் நம்புகின்றனர்.

2004 ஆம் ஆண்டு கூகுளில் நுழைந்த பொது அவரது வருகை ஜிமெயில் எனும் இலவச மெயில் சேவையின் தொடக்கதால் குறிக்கப்பட்டது . பிறகு மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங் என்று அழைக்கப்படும் தனது சர்ச் என்ஜின் எனும் தேடு பொறியையை இன்டர்நெட் எஸ்ப்ளோரோர் உலாவில் வெளியிட்டது. 2006 ஆம் ஆண்டு அந்த நாட்களில் அனைவரும் இன்டர்நெட் எஸ்ப்ளோரோர்ரை உபயோகித்து வந்தனர். சுந்தர் பிச்சை இதற்கு ஒரு தகுந்த தீர்வை கையில் எடுத்துக்கொள்ள அவர் செய்தது கம்ப்யூட்டர் உபயோகபடுத்தும் பயனர்கள் அனைவரது   கம்ப்யூட்டர் மற்றும் ப்ரோஸெரில்  நேரடியாக நிறுவப்படும் கூகுள் டூல் பார் ஒன்றை தயாரித்து அறிமுகப்படுத்தினார்.

கூகுள் டூல் பாரின் வெற்றியால் கூகுள் தனது சொந்த ப்ரோஸெர்  ( Brower )
உருவாக்க வேண்டும் என்ற தனது  கருத்தை வெளிப்படுத்தினர். இதை பற்றி முத்த நிறுவனர்களுடன் விவாதித்தா பொது கடும் எதிர்ப்பை பெற்றார். அவர்கள் சொந்த உலாவியை உருவாக்குவது மிக விலை உயர்ந்த விவகாரம் என நினைத்தனர். இருப்பினும் சுந்தர் பிச்சை தனது முயற்சியை கைவிடாமல் கூகிளின் இணை நிறுவனரகளான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பின் ஆகியவரிடம் சென்று கூகுள் சொந்த ப்ரோஸெர் ஒன்றை நிறுவ வேண்டும் என்று கூறி பின் 2008 ஆம் ஆண்டில் கூகுள் க்ரோம் ப்ரோஸெரை வெளியிட்டனர்.

பயனர்கள் கூகிளின் தேடு பொறியை நேரடியாக அணுகுவதற்கு அனுமதிக்கப்பட்டதால் கூகுள் க்ரோம் பெரும் வெற்றியை அடைந்தது இதனுடன் கூகுள் க்ரோம் ப்ரோஸெர் இன்டர்நெட் ஸ்ப்ளோரோர் மற்றும் பயர்பாக்ஸ் போன்ற மற்ற   ப்ரோஸெர்களை தாண்டி உலகில் நம்பர் ஒன் ப்ரோஸெராக பிச்சை உலகளவில் அறியப்பட்டார். க்ரோம் மற்றும் மற்ற முக்கிய தயாரிப்புகளான க்ரோம் ஒஸ் , க்ரோம் புக்ஸ் போன்றவைகளுக்கு வழியும் வகுத்து கொடுத்தது.

2008 ஆம் ஆண்டு பிச்சை தயரிப்பு வளர்ச்சியின் துணை தலைவராக பதவி உயர்வு பெற்றார் இந்த நிலையில் கூகுளின் பல விளக்க காட்சிகளில் தோன்றி கூகிளின் அணியில் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தார்.  இதன் பின் ஒரு ஆண்டிற்குள் சுந்தர் பிச்சை ஆண்ட்ராய்டு ஒஸ் தயாரிப்பு பணியை பெற்றார் அதுவரை இந்த பணி ஆண்டி ருபின் தலைமையில் இருந்தது. மிக சிறந்த அறிவாளியான சுந்தர் இதை  ஆண்ட்ராய்டு 1.0 என உருமாற்றி உலகெங்கிலும் உள்ள எல்ல வீடுகளிலும் மலிவான ஸ்மார்ட் போன் பயன்படுத்துவற்காக திட்டமாக அமைத்து கொடுத்தார் மேலும் இது உலகின் இன்னும் மற்றொரு 5 பில்லியன் மக்களை ஆண்ட்ராய்டு உலகத்திற்கு அழைத்து வந்தது. 

சிறுது காலத்திற்குள் சுந்தர் இன்னொரு பதவி உயர்வை பெற்று 2014 ஆம் ஆண்டில் தயாரிப்புகளின் தலைவராக பணியாற்ற இதில் அவர் நேரடியாக லாரி பேஜ்யின் துணை தலைவராக ஆக்கினார். இதை தவிர கூகுளின் புதுமுகமாக தன்னை நிலைநாட்டி தனித்துவத்தை பெற்றார். இத்தருணத்தில் சுந்தர் மற்ற தொழில்நுட்ப சக்திகளின் கவனத்தை ஈர்த்து வந்தார். அனாலும் அவர் கூகுளின் விஸ்வசமாக இருந்து வந்தார். அந்த நேரத்தில் தான் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் கீழ் வந்தது கூகுள் ஏனவே அவரை தக்கவைக்கவும் கூகுளின் முக்கிய ஊழியர்களாக சுந்தர் பிச்சையை நிலைநாட்டவும் புதிய சிஇஓவாக சுந்தர் பிச்சை அறிமுகப்படுத்தினார்.

தனது வியாபார புத்திசாலி தனத்துடன் சேர்ந்து தயாரிப்புகளுக்கு அவருடன் இருந்த நல்ல கண்ணோட்டம் ஆகியவையால் லாரி பேஜை விட சிறந்தவராக கருதப்பட்டார்.

சுந்தர் பிச்சையின் வாழ்கை கதை குறிப்பிடத்தக்கது மற்றும் கடுமையான சூழலில் வெற்றியை அடைய விரும்புவோர்களுக்கு ஒரு அற்புதமான முன் உதாரணமாக உள்ளது. தொடர்ச்சியான கடின உழைப்பு மற்றும் விடா முயற்சி மற்றும் புத்திசாலி தனத்துடன் செயல்பட்டதால் எல்ல தொழிலார்களும் விரும்பும் அந்த உயர்ந்த பதவிகள் அனைத்தும் அவர் அடைந்து இருக்கிறார். இன்று அவரது மதிப்பு 150 $ மில்லியன் டாலர் களுக்கு மேலாக இருக்க 85 $ பில்லியன் டாலர்களை கொண்டு உலகின் இரண்டாவது மதிப்பு வாய்ந்த பிராண்ட்டின் தலைமையை வகித்து கொண்டு இருக்கிறார் சுந்தர் இன்னும் போது மக்களுக்கு இன்னும் புதுமையான தீர்வுகளை கொண்டு வர கடுமையாக உழைத்து கொண்டு வரும் நிலையில் தொழில்நுட்பம் தளத்தின் சார்பாக கூகுளின் வெற்றி பயணம் என்றும் தொடர வேண்டும் என்று சுந்தர் பிச்சையை வணங்குகிறோம் . நன்றி


EmoticonEmoticon