Wednesday, June 26, 2019

மாதம் 1400 ரூபாய் இலவசமாக கொடுக்கிறது பேஸ்புக் எப்படி ? Study from facebook_Tholilnutpam


நாம் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்கள் அனைத்திற்கும் நாம் ஒரு ரூபாய் கூட கொடுத்தது இல்லை ஆனால் எப்படி அவர்கள் பில்லியன் கணக்ககில் பணம் சம்பாதிக்கின்றனர் என்று நீங்கள் யோசித்ததுண்டா ? அவர்கள் நமது டேட்டாக்களை விற்பதன் மூலமாகத் தான் சம்பாதிக்கின்றனர். 

எப்படி? நமது மொபைல் போன்களில் பிளிப்கார்ட் , அமேசான் போன்ற இணைய தளங்களில் ஏதாவது ஒரு பொருளை வாங்குவதற்கு  தேடி இருந்து இருப்போம். நாம்  பேஸ்புக்கை  பயன்படுத்திக் கொண்டு இருக்கும் பொது நாம் எந்த பொருளை தேடினோமோ அந்த பொருளை பற்றிய விளம்பரங்கள் அடிக்கடி  நம் கண் முன்னே டிஸ்பிளே ஆகி கொண்டிருக்கும். அது எப்படி சாத்தியம்? நம்முடைய டேட்டாக்களை அனைத்தையும் எடுத்துக் கொண்டு மற்ற கம்பெனிகளிடம் விற்று தான் லாபம்  ஈட்டுகின்றனர். அதுமட்டுமல்லாது பேஸ்புக் அக்கவுண்டை ஓபன் செய்யும் போதே உங்களை பற்றிய தகவல்களை அவர்களுக்கு நீங்களே கொடுத்து இருப்பிர்கள்.


சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் டேட்டா திருட்டு பற்றி வழக்கு தொடுத்திருந்தார்கள். பேஸ்புக்  நிறுவனமும் அது உண்மை என்று ஒப்புக் கொண்டது நாம் அறிந்த உண்மையே ..!

எப்படி பேஸ்புக் நமக்கு மதம் 1400 ரூபாய் கொடுக்கிறது. இதற்கு தான் Study From Facebook ஆப் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பேஸ்புக் அவர்களது தவறுகளை மறைக்க உங்களிடம் இருந்து உங்களுடைய அனுமதியுடன் டேட்டாக்களை பெற்றுக்கொண்டு உங்களுக்கு மதம்  1400 ரூபாய் பணத்தை இலவசமாக கொடுக்கிறது. Study From Facebook ஆண்ட்ராய்டு மொபைல் போன்களுக்கு மட்டும் வெளியிட்டுள்ளனர். இந்த  ஆப் இன்ஸ்டால் செய்த பிறகு  இன்விடேஷன் கிடைத்தால் மட்டுமே உங்களால் மாதம் 1400 ரூபாய் இலவசமாக பெற முடியும். 



இந்த ஆஃப்லளிகேஷனின் முக்கிய நோக்கம் உங்கள் டேட்டாகளை உங்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு அவர்களுடைய எதிர்கால திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்கு தான் என்று திட்டபூர்வமாக அறிவித்துருக்கிறார்கள். அதாவது உங்களுடைய டேட்டாக்களை எடுத்து பேஸ்புக்கில் உங்களுக்கு பிடித்த புது விஷயங்களை கொண்டு வருவதற்க்கு தான் பயன்படுத்துகிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.

அவர்களுடைய அதிகார பூர்வமான   இணையதளத்தில் முழுமையான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த ஆஃப்லளிகேஷனை நிறுவதில் கவனம் கொள்ளுங்கள். உங்கள் பேங்க் அக்கவுண்ட் உள்ளிட்ட டேட்டாகள் அனைத்தும் திருட்டு போகலாம். உங்களால் டேட்டாக்கள் அனைத்திற்கும் எந்த வித உத்திரவாதமும் இல்லை. முடிந்தவரை இந்த Study From Facebook ஆஃப்லளிகேஷனை இன்ஸ்டால் செய்வதை தவிருங்கள். இந்த பதிவு உங்களக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி.


EmoticonEmoticon