Saturday, July 6, 2019

உங்கள் வாழ்க்கையின் பயத்தை போக்க ஒரு நாயின் கதை || The story of a dog to overcome the fear of your life


நம்முடைய வாழ்வின் முன்னேற்ற பாதையில் முட்டுக்கட்டையாக எத்தனையோ விடயங்கள் இருக்கலாம் அதில் மிக முக்கியமான ஒரு விடயம் பயம். நம் முன்னேற்ற பாதையில் கொஞ்சம் கூட முன்னே நகர்ந்து செல்ல விடாமல் நம்மை தடுத்து நம் வாழ்கை பயணத்தை நிறுத்தி வைப்பது இந்த பயம் தான். இந்த பயத்தை எதிர்கொண்டால் நம் வாழ்வின் பல சாதனைகளை படைக்க முடியும்.

பயத்தோடு வாழ்பவர்களுக்கு ஒரு குரு அவருடைய சீடனுக்கு சொன்ன அற்புதமான தீர்வு தான் இந்த கதை.

ஒரு சீடன் அவனுடைய  குருவிடம் ஒரு கேள்வி கேட்கின்றான் உங்களை இந்த பாதையில் இந்த வாழ்க்கையில் வழி நடத்தியவரை பற்றி சொல்லுங்கள் என கேட்கின்றான். அப்போது அந்த குரு அவருடைய சீடனிடம் என்னை வழி நடத்தியது ஒரு நாய் என்று கூறுகிறார்.  நான் எவ்வளவு பெரிய முக்கியமான கேள்வியை கேட்டுள்ளேன்  நம்முடைய குரு நகைசுவை செய்கின்றரா என்று அந்த சீடன் மனதிற்குள் யோசிக்கிறான். அந்த சீடன் மீண்டும் அவன் குருவிடம் அதே கேள்வியை கேட்கின்றான் அதற்கு மீண்டும் அந்த குரு என் வாழ்க்கையை வழி நடத்தியது ஒரு நாய் என உறுதியாக கூறுகிறார்.

சரி எப்படி என்று தொடர சொல்கிறார் தான் குருவிடம். அப்போது அந்த குரு சொல்கிறார் ஒரு முறை அந்த நாயை நான் ஒரு ஆற்றங்கரை ஓரம் இறக்க கூடிய  தருவாயில் பார்த்தேன் என கூறினார். அனாலும் அந்த ஆற்றில் அந்த நாய் அருந்த கூடிய அளவில் நீர் ஓடிக்கொண்டு தான் இருந்தது  அவை அருகில் சென்று அந்த தண்ணிரை அருந்தும் வாய்ப்புகளும் இருந்தன. ஆனால் அந்த நாயோ தாகத்தோடு இறக்கும் தருவாயில் இருந்தது. எதற்காக இந்த நாய் இப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்கு அருகில் சென்று பார்த்தேன் என்றார்.

அந்த நாய் ஒவ்வொரு முறையும் தண்ணீர் குடிப்பதற்கு அந்த ஆற்றிற்கு  அருகில் செல்வதும் மீண்டும் தண்ணீர் குடிக்காமல் திரும்பி வருவதுமாக இருந்தது. அருகில் சென்று பார்த்தேன் அந்த நாய் தன்னுடைய நிழலை அந்த ஆற்றில் பார்த்துவிட்டு இன்னும் ஒரு நாய் இங்கு இருக்கிறது என்ற பயத்தில் ஒவ்வொரு முறையும் திரும்ப ஓடி வந்து விடுகிறது. அந்த நாய் தண்ணிரை அருந்தி விட வேண்டும் இல்லை என்றல் இறந்து விடுவோம்  என்ற  ஒரு இக்கட்டானா சூழ்நிலை அந்த நாய்க்கு உருவாகியது. அப்போது அந்த நாய் என்ன நடந்தாலும் உயிரே போனாலும்  பரவாயில்லை என உறுதி எடுத்துக்கொண்டு ஆற்றினுள் குதித்து நீரை அருந்தியது. 

அது வரை ஆற்றங்கரையில் எட்டி பார்த்துக்கொண்டு நீரை அருந்த முயற்சித்த நாய் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற உறுதி எடுத்துக்கொண்ட நாய் ஆற்றில் குதித்து வெற்றிகரமாக நீரை அருந்திவிட்டு வெளியே வந்தது. அப்போது அந்த நாய் எந்த ஒரு நாய்க்கு பயந்து ஒவ்வொரு முறையும்  திரும்பி ஓடிவந்தததோ அந்த நாய்யும் மறந்து போனது அதற்கு இருந்த சவால்களும் தடைகளும் மறைந்து போனது.

இதை பார்த்துக்கொண்டிருந்த எனக்கும்  நம் வாழ்க்கையின் பல சமயங்களில் இப்படி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என யோசித்தேன். பயங்கள் தான் வாழ்வின் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சாதனைகளின் போதும் ஒவ்வொரு வெற்றி பயணங்களின் போதும் நம்மை தடுத்து நிறுத்திக்கொண்டிருக்கின்றன என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

அதன் பிறகு அந்த தடைகளை தூக்கியெறிந்து விட்டு எப்படி அந்த நாய் அந்த ஆற்றுக்குள் குதித்து வெற்றிகரமாக நீரை அருந்திவிட்டு வந்ததோ அது போல நானும் என்னுடைய வாழ்க்கையில் பயத்தை விரட்டி வெற்றிகரமாக பயணத்தை தொடங்கினேன் என்று அந்த குரு அவன் சீடனிடம் கூறினார்.

நம் வாழ்வின் பயத்தோடு கழியும் ஒவ்வொருநாளும் போராட்டமான நாட்களே எனவே உங்கள் வாழ்க்கையின் பயத்தை போக்குங்கள் நீங்களும் உங்கள் வாழ்வின் பல சாதனைகளை படைக்க முடியும். இந்த பதிவு உங்களக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி.


EmoticonEmoticon