Wednesday, February 19, 2020

ஆஸ்ட்ரம் கேமிங் மவுஸ் அறிமுகம் || Astrum gaming mouse ..!

கம்ப்யூட்டர் சார்ந்த உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆஸ்ட்ரம் நிறுவனம் புதிதாக பல வண்ண எல்.இ.டீ விளக்குகளைக் கொண்ட மவுஸை  அறிமுகம் செய்துள்ளது. பன்முக எல்.இ.டீ விளக்குகளை விரும்புவோர் இதை தேர்வு செய்யலாம். இதன் விலை சுமார் ரூ.799 ஆகும். மிகவும் சிக்கலான, சவாலான வீடியோ கேம்களை விளையாடுவதற்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நீண்ட நேரம் செயல்படக்கூடியது. விரல்களுக்கு வலி ஏற்படாத வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது.



இதில் ஆப்டிகல் ட்ராக்கிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் 1.5 மீட்டர் நீளம் கொண்ட அதிவிரைவு U.S.B கேபிளும் உள்ளது. இதற்கு கூடுதலாக எவ்வித சாப்ட்வேரும் இதற்கு தேவையில்லை. விண்டோஸ் 7,8,10 இயங்குதளம் உள்ள கம்ப்யூட்டரில் இதைப் பயன்படுத்தலாம். எத்தகைய தளத்திலும் செயல்படும் வகையில் இந்த மவுஸ் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து முன்னணி விற்பனையங்களிலும் இது கிடைக்கும்.


EmoticonEmoticon