Saturday, February 15, 2020

மண் இல்லா விவசாயம் ( ஹைட்ரோபோனிக்) || Soil Farming Hydroponic ..!

மண் இல்லா விவசாயத்தில் செடிகள் வளர்க்கப் பயன்படுத்தும் பொருட்கள் அல்லது படிவங்கள் மாறுபட்டவை. நமக்கு நன்கு தெரிந்த பொருட்களும், புதிய பொருட்களும் பயன்படுத்த படுகின்றன. அவை இயற்கை வளர்ச்சியுள்ள (Organic) இயற்கை வளர்ச்சியற்ற (Inorganic) பொருட்களாகும். சில இயற்கையாக கிடைக்கின்றன.  எடுத்துக்காட்டாக தேங்காய் நார் கழிவு, மற்றவை செயற்கையாக உருவாக்கப்படுகின்றன. இயற்கையாக கிடைப்பவை அப்படியே பயன்படுத்த முடியும். மற்றவற்றை பதப்படுத்தி பயன்படுத்த வேண்டும். இவைகளில் பலவற்றை சுத்தப்படுத்தி மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம்.


செடிகள் வளர்க்க பலவகையான பொருட்களை பயன்படுத்துகின்றோம். எந்தப் பொருள் செடிக்குப் பாதகம் உண்டாகாமல் வளர பயன்படுகிறதோ அவற்றை எல்லாம் வளர்க்கப்  பயன்படுத்துகின்றோம். சில இயற்கையாகக் கிடைக்கின்றன. சில செயற்கையாக உருவாக்கப்படுகின்றன. ஆனால் நாம் வளர்க்கும் செடிகளுக்கு ஏற்ற பொருட்ககளை பயன்படுத்த வேண்டும் அவை அருகாமையில் கிடப்பவையாகவும், விலை குறைவாகவும், எளிதில் கிடைப்பதாகவும் இருக்க வேண்டும்.

1.ஓயசிஸ் க்யூபர்:

இவை எடை குறைவான , ஏற்கனவே உருவாக்கப்பட்ட கற்களாகும். வெட்டி பதியன் போடுவதற்கு ஏற்ற பொருளாகும். இதன் ஜீர் மதிப்பு 7. இது அதிக அளவு தண்ணிரை தன்னுள் உறிஞ்சி வைத்திருக்கும். இவை செடிகளின் ஆரம்ப கட்டத்திற்கு ஏற்றவை.

2.தேங்காய் நார்:

மிகவும் பரவலாக எல்லா  இடங்களிலும் , எல்லோராலும் மிக அதிகமாக பயன்படுத்தும் பொருள் தேங்காய் நார் கழிவுகள். இது முற்றிலும் இயற்கையில் கிடைப்பது ஹைட்ரோபோனிக் முறையில் செடிகள் வளர்ப்பதற்கு ஏற்ற, சிறந்த பொருளாகும். இது தென்னை பொருட்களின் கழிவாக இருப்பதால் சுலபமாக கிடைக்கின்றது.

தேங்காய் பயன்படுத்திவதில் பல நன்மைகள் உள்ளன. பாறை துகள்களை விட அதிக பிராண வாயுவை தந்து கொண்டிருக்கும். மேலும் அதிக அளவு தண்ணீரை தன்னுள் சேமித்து வைத்திருக்கும் பண்பு உள்ளது.

வேர்கள் நன்கு வளர தேவையான உயர்வேதி நீரை தருகின்ற தன்மை, தேங்காய் நாருக்கு உண்டு.மேலும் வேர் அழுகல் நோய்க்கு எதிருப்பு தன்மையும், மற்ற நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியும் உண்டு. டச்சு நாட்டில் ஹிட்ரோபோனிக் ஆராய்ச்சியாளர்கள் கலந்து 50 விழுக்காடு சுட்ட களிமண் கற்களையும் கலந்து பயன்படுத்தும்போது சிறந்த விளைபொருட்கள் கிடைத்தன.

நாம் தென்னை நார் கழ்வுகளைத் தேர்வு செய்யும் பொது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வழக்கமாகக் கிடைக்கும் தென்னை நார்க் கழிவுகள் தரம் குறைந்ததாகவும், கடல் உப்பு கலந்தவையாகவும் இருக்கும். இத்தகைய பொருட்களைப் பயன்படுத்தினால் நமக்கு நல்ல பலன் அளிக்காது.


3.பெர்லிட்:

பெர்லிட் என்பது நிலத்திலிருந்து வெட்டி எடுக்கப்படும் ஒருவகை பாறை. இது பலா நூற்றாண்டுகளுக்கு முன் எரிமலைகள் வெடித்தபோது, 1600 க்கு திடீரென வெப்பம் அடைந்த போது அதனுள் இருந்த நீர்த்திவலைகள் ஆவியாகி பாறையை சோளப்பொறி போன்று மலர்ந்து சிறு சிறு குமிழ்கள் தன்னுள் கொண்டுள்ள பாறைகளாக மாறின.

பெர்லிட் ஹிரோடோபோனிக் செடிகள் வளர்க்க மிகவும் உகந்த பொருளாகும். இதனை மற்ற பொருட்களாளுடன் கலந்து பயன்படுத்தலாம். பெர்லிரிட்டும், பெர்மிகுட்டும் 50:50 என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்தினால் நல்ல பலனளிக்கும். இதில் உள்ள நுண்துளைகள் திரி போன்று செயல்பட்டு, கரைசல் செடியின் வேர்களை எளிதில் சென்றடைய உதவுகிறது.

இது செயற்கையானது ஆகையால் இதனை ஜீரன் மதிப்பை ஆய்வு செய்து 6.2க்கு கொண்டு வந்து பயன்படுத்த வேண்டும். இது மேலும் தன்னுள் எவ்விதமான நுண்ணூட்டசத்தையும் வைத்திருக்கவில்லை. செடிகளுக்குத் தேவையான நுண்ணூட்ட சத்துக்களை நாம்தான் கொடுக்க வேண்டும்.

இதில் உள்ள மிகப்பெரிய குறைபாடு என்னவெனில் இது தன்னுள் தண்ணீரைக் இரைக்க முடியும். விரைவில் காய்ந்துவிடும். எனவே அடிக்கடி தண்ணிர் விட்டு செடிகளை காய்ந்து விடாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

4.வெர்மிகுலிட் :

இதுவும் நிலத்திலிருந்து வெட்டி எடுக்கப்படும் மற்றோரு கனிமப் பொருள். இது பார்ப்பதற்கு ஏறக்குறைய மைக்கா போன்று இருக்கும். இதனை வெப்பப்படுத்தினால் அதனுள் பயன்படுத்த வேண்டும். இதன் மதிப்பை 4-5ல் நிலைப்படுத்தி குறைந்தது ஒருநாள் (24 மணி நேரம்) உலரவைத்து பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்கள் பயன்படுத்தும் போது இது ஜீபி மதிப்பை மாற்றிவிடும். நாம் இதனைப் பயன்படுத்தும் போது மேலிருந்து கரைசலை தரவேண்டும். இது செடிகள் வளர்வதற்கும், வேர்கள் நன்கு பரவுதற்கும் ஏற்ற சிறந்த பொருளாகும்.

5.மணல் :

மணல் இயற்கையாகவே கிடைத்தாலும், இதன் Ph மதிப்பை கணக்கிட வேண்டும். ஏன்னெனில் இதன் ph மதிப்பு நடுநிலையில் இருக்காது. மணலின் ph மதிப்பை நிலைப்படுத்த வேண்டும். மணலுக்கு நீர்ப்பிடிப்பு தன்மையை கிடையாது. ஆனால், தண்ணிரை வெளியேற்றும் தன்மை உடையது. எனவே அடிக்கடி தண்ணீரை விட்டு ஈரத்தன்மையை குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மணல் , வேர்கள் நன்கு வளர உதவி செய்யும் தன்மை உடையது. ஆனால் மணல் தொட்டியை நெருக்கமாக நிரப்பும் தன்மை உள்ளதால் வேர்கள் வளர போதுமான இடமில்லாமல் போகலாம். போதுமான காற்றும்  இல்லாமல் போகலாம். எனவே இத்துடன் (Perlite) கலந்து பயன்படுத்தும் பொது காற்று, வசதி உள்ளதாக மாறுகின்றது.


EmoticonEmoticon