இந்தியாவில் அதிவேக இணையம்... களத்தில் ஏர்டெல், கூகுள் மற்றும் எலான் மஸ்க்!

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) இணையதள சேவை 2022-ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அதற்கு தற்போதே முன்பதிவு செய்யவும் ஸ்டார்லிங்கின் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எலான் மஸ்க்கின் (Elon Musk) செயற்கைக் கோள் வழி இணையச் சேவைத் திட்டமான ஸ்டார்லிங்க் இந்தியாவில் 2022-ல் கிடைக்கும் என அதன் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே இந்த சேவை கிடைக்கும் எனவும், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை எனவும் அந்தப் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்ன, விலைதான் கொஞ்சம் அதிகம். 99 அமெரிக்க டாலர்களை வைப்பு நிதியாகச் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும். இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 7000 ரூபாய்.

Airtel

இந்தத் திட்டத்தின் மூலம் 1 GBPS வரை அதிவேக இணையச் சேவையை அந்நிறுவனம் வழங்க முடிவு செய்துள்ளது. தற்போது சோதனையில் இருக்கும் இந்தத் திட்டம், 2021-ன் பாதியில் அல்லது இறுதியில் ஆஸ்திரேலியா, மெர்ஸிகோ, நியூஸிலாந்து, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்குப் பயன்பாட்டிற்கு வரும். இந்தியப் பயனர்கள் முன்பதிவு செய்ய, அதன் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் சென்று பதிவு செய்யலாம்.

Google.

இந்தியாவில் அதிவேக இணையத்தைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முனைப்பில் வேறு சில நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன. ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் முதல் 5G நெட்வொர்க்கை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முனைப்பில் இருக்கிறது. ஒளியின் (Light) மூலம் தகவல்களைக் கடத்தும் புதிய முயற்சி மூலம் இந்தியாவிற்கு இணையச் சேவையைக் கொண்டு வர, ஏர்டெல் மற்றும் ஜியோவுடனான பேச்சுவார்த்தையில் இருக்கிறது கூகுள்.
Post a Comment

0 Comments