லெனோவோ, சாம்சங், ஆப்பிள் நிறுவனங்கள் செம ஹேப்பி... ஏன் தெரியுமா?!

கடந்த 2020-ல் இந்தியாவில் 'டேப்லெட்'-களின் (Tablet) விற்பனை 14.7 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக IDC நிறுவன அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2020 ஜனவரியில் இருந்து டிசம்பர் மாதம் வரை மட்டும் 28 லட்சம் டேப்லெட்கள் இந்தியாவில் விற்பனையாகியிருக்கின்றன. மொபைல் மற்றும் லேப்டாப்பே இந்திய மக்களால் அதிகளவில் விரும்பப்பட்டு வந்தன. இதனால் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இந்தியாவில் சரிவைக் கண்டு வந்திருந்தது டேப்லெட் விற்பனை. ஆனால், கொரோனா காலத்தில் வீட்டிலிருந்து படிக்கும், வேலைபார்க்கும் சூழலுக்குப் பலர் தள்ளப்பட்டுள்ளதால் டேப்லெட் விற்பனை அதிகரித்திருக்கிறது.

IDC Report

Also Read: `அமேசான் காட்டில் நிலங்கள் விற்பனைக்கு...'- ஃபேஸ்புக்கில் விளம்பரம்! பின்னணி என்ன?

இந்திய டேப்லெட் சந்தையில் முதல் மூன்று இடங்களை லெனோவோ (Lenovo), சாம்சங் (Samsung) மற்றும் ஆப்பிள் (Apple) ஆகிய நிறுவனங்கள் பிடித்துள்ளன. 2019-விட 6.6 சதவிகிதம் 2020-ல் முன்னேற்றம் கண்டுள்ளது லெனோவோ. 2019-ஐ விட 13 சதவிகிதம் அதிகரித்து 32 சதவிகிதம் சந்தைப் பங்குகளுடன் சாம்சங் நிறுவனம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

2019-ல் மூன்றாம் இடத்தில் இருந்த மும்பையைச் சேர்ந்த ஐ-பால் (Iball) நிறுவனத்தைப் பின்னால் தள்ளி ஆப்பிள் 2020-ல் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. 2020-ன் இரண்டாம் பாதியில் வெளியிடப்பட்ட ஆப்பிள் டேப்லெட்கள் அதிக வரவேற்பைப் பெற்றதன் காரணமாக ஆப்பிள் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களை ஐ-பால் மற்றும் ஹூவாவே ஆகிய நிறுவனங்கள் பிடித்திருக்கின்றன. இதில் நான்காம் இடம்பிடித்த ஐ-பால் நிறுவனம் மட்டும் 15 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாகச் சரிவைக் கண்டுள்ளது.
Post a Comment

0 Comments