வெளியானது ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்... விலை மற்றும் சிறப்புகள் என்னென்ன?

ஸ்மார்ட்போன் ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டிருந்த ஒன்பிளஸின் 9 சீரிஸ் ஸ்மார்ட் போன்கள் நேற்று வெளியானது.

9 சீரிஸில் ஒன்பிளஸ் 9, 9 ப்ரோ மற்றும் 9 ஆர் ஆகிய மொபைல்களை நேற்று வெளியிட்டது ஒன்பிளஸ் நிறுவனம். மொபைல்களுடன் சேர்த்து ஒன்பிளஸ் ஸ்மார்ட் வாட்சும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 39,999 ரூபாயில் தொடங்கி 69,999 ரூபாய் வரை பல வேரியன்ட்களில் வெளியாகியுள்ளது ஒன்பிளஸ் 9 சீரிஸ்.

ஒன்பிளஸ் 9

9 சீரிஸின் மூன்று மொபைல்களும் 8 GB/128 GB மற்றும் 12 GB/256 GB ஆகிய இரு வேரியன்ட்களில் கிடைக்கின்றன. ஒன்பிளஸ் 9ஆரின் 8 GB வேரியன்ட் 39,999 ரூபாயிலும், 12 GB வேரியன்ட் 43,999 ரூபாயிலும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் ஒன்பிளஸ் 9-ன் 8 GB வேரியன்ட் 49,999 ரூபாயாகவும், 12 GB வேரியன்ட் 54,999 ரூபாயாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 9 சீரிஸின் டாப் மாடலான ஒன்பிளஸ் 9 ப்ரோவின் 8 GB வேரியன்ட் 64,999 ரூபாயிலும், 12 GB வேரியன்ட் 69,999 ரூபாயிலும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் 16,999 ரூபாயில் வெளியாகியுள்ளது.

OnePlus 9R

9 சீரிஸின் டாப் மாடல்களான 9 மற்றும் 9 ப்ரோ இரண்டிற்கும் குவால்கம் ஸ்னாப்ட்ராகன் 888 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. 9ஆர் மாடலுக்கு ஸ்னாப்ட்ராகன் 870 ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாடல்களுமே 5G சப்போர்டுடன் வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ் 9 ப்ரோ ஏப்ரல் 1 முதல் விற்பனைக்கு வருகிறது. ஒன்பிளஸ் 9 மற்றும் 9 ஆர் ஆகிய இரண்டு மாடல்களும் ஏப்ரல் 15 முதல் விற்பனைக்கு வருகிறது. மொபைல்கள் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் தளங்களில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments