Header Ads Widget

Responsive Advertisement

ROG Phone 5 சீரிஸ் மொபைல்கள்: 18 GB RAM, 512 GB மெமரி... கேமிங் ரசிகர்களே தயாரா?!

கேமிங் ஸ்மார்ட் ஃபோன் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டிருந்த Asus ROG Phone 5 சீரிஸ் நேற்று இந்தியாவில் வெளியானது.

Asus ROG 5 சீரிஸில் மூன்று மாடல் மொபைல்களுடன் களமிறங்கியுள்ளது. ROG Phone 5, ROG Phone 5 Pro மற்றும் ROG Phone 5 Ultimate. இதில் ROG Phone 5 இரண்டு வேரியன்ட்களில் வெளியாகியுள்ளது. ROG Phone 5-ன் பேஸ் வேரியன்ட் 8 GB RAM + 128 GB ஸ்டோரேஜ் 49,999 ரூபாய் விலையிலும், ROG Phone 5-ன் இரண்டாவது வேரியன்ட் 12 GB RAM + 256 GB ஸ்டோரேஜ் 57,999 ரூபாய் விலையிலும் வெளியாகியுள்ளது.

இதன் அடுத்த மாடலான ROG Phone 5 Pro ஒரே வேரியன்ட்டாக 16 GB RAM + 512 GB ஸ்டோரேஜூடன் 69,999 ரூபாய் விலையிலும், கடைசி மாடலான ROG Phone 5 Ultimate 18 GB RAM + 512 GB ஸ்டோரேஜூடன் 79,999 ரூபாய் விலையிலும் வெளியாகியிருக்கிறது. இதுவரை வெளியானதிலேயே அதிகபட்ச RAM கொண்ட ஸ்மார்ட்போனாக இந்த ROG Phone 5 Ultimate இருக்கிறது.

RAM மற்றும் ஸ்டோரேஜ் தவிர மற்ற அம்சங்கள் அனைத்தும் எல்லா மாடல்களிலும் ஒன்றாகவே இருக்கிறது. 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, முன்பக்கம் கொரில்லா கிளாஸ் விக்டஸ், பின் பக்கம் கொரில்லா கிளாஸ் 3, 3000 mAH பேட்டரிகள் இரண்டு பொருத்தப்பட்டுள்ளதால் எடையும் கொஞ்சம் அதிகமாக 236 கிராம் உள்ளது. வலது பக்கம் பவர் மற்றும் வால்யும் பட்டன்கள் இருக்கின்றன. மேலும், கேமிங்கிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதால், மொபைல் சூடாவதைத் தடுக்க Aero Active Coolers-கள் பொருத்திக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.

Asus ROG Phone 5 Series

பின் பக்கம் 64 MP + 13 MP + 5 MP என மூன்று கேமாரக்களும், முன் பக்கம் 24 MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நானோ சிம்கள் பொருத்திக் கொள்ளும் வசதியுடனும், ஆண்ட்ராய்டு 11 இடம் பெற்றுள்ளது. மூன்று மாடல்களிலுமே, Qualcomm Snapdragon 888 ப்ராசஸர்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 512 GB ஸ்டோரேஜ் கொடுத்திருப்பதால் microSD Card ஸ்லாட் தரப்படவில்லை, ஆனால் External HDD சப்போர்ட் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 65W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த கேமிங் அனுபவத்தைக் கொடுப்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ள ROG Phone 5 சீரிஸ், கேமிங்கிற்கான அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. மொபைலின் பெர்ஃபாமன்ஸ் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.



Post a Comment

0 Comments