பிரபல குறுஞ்செய்தி சேவைத் தளமான வாட்ஸ்அப் (Whatsapp) நேற்று இரவு (வெள்ளிக்கிழமை) 1 மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது. தோராயமாக இரவு 10.30 மணியில் இருந்து இந்தப் பிரச்னை தொடங்கியது. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் வாட்ஸ்அப்பில் இந்தப் பிரச்சனை ஏற்பட்டது. வாட்ஸ்அப் முடங்கியதையடுத்து, பயனர்கள் பலரும் இந்தப் பிரச்னையை ட்விட்டரில் #Whatsappdown என்ற ஹேஷ்டேகில் பகிவு செய்தனர். வாட்ஸ்அப்பில் சிறிய தொழில்நுட்பப் பிரச்சனையால் இந்த முடக்கம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. "இந்த முடக்கம் 45 நிமிடங்களுக்கு நீண்டிருந்தது... சேவை மீண்டும் செயல்பாட்டில் இருக்கிறது" என ட்வீட் செய்திருக்கிறது வாட்ஸ்அப்.
Thanks for your patience, that was a long 45 minutes but we are back! #WhatsAppDown
— WhatsApp (@WhatsApp) March 19, 2021
வாட்ஸ்அப் முடங்கியதையடுத்து இன்று காலை பேஸ்புக்கிலும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பயனர்களால் பேஸ்புக்கில் உள்நுழைய முடியவில்லை. இது குறித்து பேஸ்புக் தரப்பு "சிறிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அது தற்போது சரிசெய்யப்பட்டுவிட்டது. சிரமத்திற்கு வருந்துகிறோம்'' எனத் தெரிவித்துள்ளது. இதனுடன் பேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு தளமான இன்ஸ்டாகிராமும் நேற்று சிறிது நேரம் முடங்கியதாகப் பயனர்கள் பலர் தெரிவித்துள்ளனர். தற்போது அனைத்து சேவைகளும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டன. இந்த சம்பவங்கள் குறித்த மேலும் எந்த விபரங்களையும் பேஸ்புக் நிறுவனம் தெரிவிக்கவில்லை.
வாட்ஸ்அப் தான் உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் முன்னணி குறுஞ்செய்தித் தளம் என்பதால், நெட்டிசன்கள் மீம்களால், ட்விட்டரில் பொங்கியெழுந்துவிட்டனர்.
No comments:
Post a Comment