தான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக நடிகர் அஜித்தின் 'வலிமை' பட அப்டேட் கிடைக்கும் என, ட்வீட் ஒன்றுக்கு கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பதில் அளித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில், 17 தொகுதிகளுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை, மத்திய அமைச்சரும் தமிழகத் தேர்தல் பொறுப்பாளருமான கிஷன் ரெட்டி, பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் ஆகியோர் நேற்று (மார்ச் 14) டெல்லியில் வெளியிட்டனர்.
No comments:
Post a Comment