Thursday, April 22, 2021

https://gumlet.assettype.com/vikatan/2021-04/01e67057-520e-4b2c-8edf-2e81a645e4db/moxie_cutaway.gifசெவ்வாயில் கூட ஆக்ஸிஜன் ரெடி... புதிய சாதனைப்படைத்த நாசா! #PerseveranceRover

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயும் பூமி போன்ற ஒரு கிரகமாகவே இருந்திருக்கும், அப்போது அங்கு உயிர்கள் வாழ்ந்திருந்தாலும் ஆச்சரியப்படைவதற்கில்லை என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். இந்த கூற்று உண்மையா என்பதை கண்டறியும் நோக்கத்தோடு செவ்வாய்க்கு பெர்ஸிவியரன்ஸ் என்னும் ரோவரை அனுப்பிவைத்தது நாசா. மிகவும் சிக்கலான ஜெஸிரோ பள்ளத்தாக்கில் வெற்றிகரமாக பிப்ரவரி மாதம் இந்த ரோவர் தரைஇறங்கியது. அப்போதிலிருந்தே விண்வெளி ஆராய்ச்சியில் தினமொரு புதிய மைல்கல்லை எட்டிகொண்டே இருக்கிறது நாசா.

இதுவரை செவ்வாய்க்கு அனுப்பப்பட்டதிலேயே அதிநவீன ரோவர் பெர்ஸிவியரன்ஸ்தான். உயிர்கள் வாழ்ந்ததற்கான தடயங்களை தேடுவதுதான் இந்த மிஷனின் முக்கிய நோக்கம் என்றாலும், கூடுதலாக சில விஷயங்களையும் இதனுடன் சோதனை செய்துகொண்டிருக்கிறது நாசா. வருங்காலத்தில் செவ்வாயில் செய்யவிருக்கும் ஆராய்ச்சிகளுக்கு தேவைப்படும் தொழில்நுட்பங்களை தற்போது ஒத்திகை பார்த்துவருகிறது நாசா.

இதற்காக பெர்ஸிவியரன்ஸ் ரோவர் பல்வேறு குட்டி குட்டி சாதனங்களையும் தன்னுள்ளே வைத்தே இந்தப் பயணத்தைப் பூமியிலிருந்து தொடங்கியது. அந்த சாதனங்களைக் கடந்த சில தினங்களாக ஒவ்வொன்றாகச் சோதனை செய்து பார்த்து வருகிறது நாசா. சில நாட்களுக்கு முன் இன்ஜெனியூவிட்டி என்ற குட்டி ஹெலிகாப்டரை செவ்வாயில் பறக்க செய்து விண்வெளி ஆராய்ச்சியில் புதிய மைல் கல் எட்டியது நாசா. நேற்று, பெர்ஸிவியரன்ஸ் ரோவரோடு அனுப்பப்பட்டிருந்த 'மாக்ஸி' (MOXIE) என்னும் சாதனத்தை சோதனை செய்து அதிலும் வெற்றியும் கண்டிருக்கிறது.

சரி, மாக்ஸியின் செயல்பாடு என்ன? செவ்வாயில் அதிகம் காணப்படும் கார்பன்-டை-ஆக்ஸைடிலிருந்து மனிதன் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதே மாக்ஸியின் வேலை.

செவ்வாயின் வளிமண்டலம் 95 சதவிகித்தை கார்பன்-டை-ஆக்ஸைடாலேயே நிறைத்திருக்கிறது. மீதம் இருக்கும் 5 சதவிகிதத்தில் நைட்ரஜன் மற்றும் ஆர்கான் வாயுக்கள் அதிகளவில் நிறைந்திருக்கிறது. செவ்வாயின் வளிமண்டலத்தின் ஆக்ஸிஜனின் அளவு மிக மிகக் குறைவு. வருங்காலத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர்களை செவ்வாய்க்கு அனுப்பும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டி இருந்தால், அங்கு அவர்கள் உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் அவசியம். இது இல்லாமல் ராக்கெட் எரிபொருள்களுக்கும் ஆக்ஸிஜன் அவசியம். செவ்வாயில் இருக்கும் கார்பன்-டை-ஆக்ஸைடில் இருந்து ஆக்ஸிஜனை பிரித்தெடுக்க முடிந்தால், இனி வரும் திட்டங்களுக்கு மிகவும் உதவிகரமாக அது அமையும் என்ற நோக்கில்தான் பெர்ஸிவியரன்ஸோடு மாக்ஸியும் சேர்த்து அனுப்பப்பட்டது.

மாக்ஸி | MOXIE

கடந்த ஏப்ரல் 20-ம் தேதி செவ்வாயில் மாக்ஸியின் சோதனை துவங்கியது. முதல் சோதனையில் சுமார் 5 கிராம் அளவிலான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்தது மாக்ஸி. 5 கிராம் என்பது மனிதன் சராசரியாக 10 நிமிடங்களில் சுவாசிக்கும் ஆக்ஸிஜன் அளவு. ஒரு மணி நேரத்திற்கு 10 கிராம் அளவிலான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் திறனோடு மாக்ஸி வடிவமைக்கப்பட்டுள்ளது. 'எலக்ட்ரோலைஸிஸ்' முறையில் அதீத வெப்பத்தில் கார்பன-டை-ஆக்ஸைடு மூலக்கூறுகளில் இருந்து ஆக்ஸிஜன் அணுக்களை மாக்ஸி பிரித்தெடுக்கும். எனவே, அதிக வெப்பத்தைத் தாங்கும் தன்மையோடே மாக்ஸி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த சாதனத்தில் அடுத்த இரண்டு வருட காலத்திற்குள் 9 முறை இதே போன்ற சோதனையை நடத்தத் திட்டமிட்டுள்ளது நாசா. வெவ்வேறு வகையான சூழ்நிலைகள் மற்றும் வானிலைகளில் அதன் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறிய இந்த சோதனைகளை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.

இந்த அளவிலான கருவியைக் கொண்டு விண்வெளி வீரர்களால் தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்ய முடியமா என்றால், கண்டிப்பாக முடியாது. இது வெறும் சோதனை மட்டுமே. செவ்வாயில் ஆக்ஸிஜனை நம்மால் உற்பத்தி செய்ய முடியுமா என்பது இதிலிருந்து தெரிந்துவிடும். மாக்ஸியின் பிரதான நோக்கமே அதுதான்.

ஆக்ஸிஜன் உற்பத்தி அளவு

நான்கு விண்வெளி வீரர்கள் செவ்வாயில் இருந்து விண்கலத்தில் திரும்ப 7 மெட்ரிக் டன் எரிபொருளுடன், 25 மெட்ரிக் டன் அளவு ஆக்ஸிஜனும் தேவைப்படும். 25 மெட்ரிக் டன்கள் ஆக்ஸிஜனை பூமியில் இருந்து விண்கலத்துடன் அனுப்புவதை விட, 1 மெட்ரிக் டன் அளவிலான ஆக்ஸிஜனை பிரித்தெடுக்கும் கருவியை அனுப்புவது எளிது எனத் தெரிவித்திருக்கிறார் மாக்ஸியின் முதன்மை ஆராய்ச்சியாளர் மைக்கேல் ஹெக்ட் (Michael hecht).

ஆட்சியாளர்கள் கவனத்திற்கு.... செவ்வாயில் கூட ஆக்ஸிஜன் ரெடி!


from விகடன் https://ift.tt/3sBhN1X
via IFTTT

No comments:

Post a Comment