Friday, April 23, 2021

https://gumlet.assettype.com/vikatan/2021-04/45906b0b-9b1a-4051-9584-d345e8d59e13/39466_75534_39408_75413_000_lead_Facebook_xl_xl.jpgபுதிய தனியுரிமைக் கொள்கையுடன் ஆப்பிள்... எதிர்க்கும் பேஸ்புக்! என்ன நடக்கிறது?

ஆப்பிள் சாதனங்களின் சிறப்பம்சமே பயனர்களின் பிரைவசிக்கு அது தரும் மரியாதைதான். பயனர்களின் பிரைவசி தொடர்பான புதிய அறிவிப்பு ஒன்றையும் சில மாதங்களுக்கு முன் அறிவித்திருந்தது ஆப்பிள். அதாவது, தங்களது ஆப் ஸ்டோரில் இருக்கும் செயலிகள் பயனர்களிடமிருந்து எந்தெந்த தகவல்களைச் சேகரிக்கின்றன என்பதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என முடிவு செய்தது. இது குறித்த தெளிவான விளக்கங்களை அடுத்த அப்டேட்டில் கொண்டு வரவிருப்பதாக அறிவித்திருந்தது ஆப்பிள். அடுத்த இயங்குதள அப்டேட்டான ஐஓஎஸ் 14.5 அடுத்த வாரம் முதல் பயனர்களின் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது. இந்நிலையில் ஆப்பிளின் புதிய பிரைவசி கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத செயலிகள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள். அது பேஸ்புக்காக இருந்தாலும் சரி, கல்லூரி மாணவர் நேற்று உருவாக்கிய ஆப்பாக இருந்தாலும் சரி அதன் பிரைவசி கொள்கைகளை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என நிர்ப்பந்தித்திருக்கிறது ஆப்பிள்.

பேஸ்புக் தகவல் சேகரிப்பு

அது என்ன புதிய பிரைவசி பாலிசி?

பயனர்களின் கண்ணோட்டத்தில் புதிய பிரைவசி பாலிசி பயனர்களுக்குப் பயன் தரக்கூடிய ஒன்றுதான். மற்ற நிறுவனங்கள் நம் ஸ்மார்ட்போனில் இருந்து என்னென்ன தகவல்களை சேகரிக்கின்றன என்பதுதான் பலருக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தும் விஷயமாக இருந்துவருகிறது. கூகுளும், பேஸ்புக்கும் முழுக்க முழுக்க நம் தகவல்களை மூலதனமாக வைத்தே கல்லா கட்டி வருகின்றன. என்னென்ன தகவல்களை அந்த நிறுவனங்கள் சேகரிக்கின்றன என பெரும்பாலும் நமக்குப் தெரிவதும் இல்லை. ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இடம்பெறும் செயலிகள், பயனர்களின் சாதனங்களில் இருக்கும் தகவல்களைச் சேகரிக்க வேண்டும் என்றால், அதற்கான அனுமதியைப் பயனர்களிடம் பெற வேண்டும் என்பதுதான் ஆப்பிளின் புதிய கட்டுப்பாடு. ஒரு வேளை பயனர்கள் தங்கள் தகவல்களைக் கொடுக்க விருப்பமில்லை எனத் தெரிவித்தால் நிறுவனங்களால், அந்தத் தகவல்களைச் சேகரிக்க முடியாது.

பேஸ்புக்கும், பிரைவசியும்!

பேஸ்புக்குக்கும் பயனர்களின் பிரைவசிக்கும் ஏழாம் பொருத்தம் தான். பேஸ்புக்கோ முடிந்த அளவு பயனர்களிடம் எவ்வளவு தகவல்களைப் பெற முடியுமோ அவ்வளவையும் பெற்று விட வேண்டும் என வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. வாட்ஸ்அப்பில் கூட புதிய தனியுரிமைக் கொள்கைகளை வலுக்கட்டாயமாகப் பயனர்களிடத்தில் திணித்துக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் பேஸ்புக்கால் ஆப்பிளின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. முன்னர் கூறியது போல, பயனர்களின் தகவல்கள்தான் பேஸ்புக்கின் மூலதனம். தகவல் என்றால் என்ன என்பதை முதலில் விளக்கினால், இன்னும் தெளிவாக இருக்கும். நீங்கள் இணையத்தில் எந்தெந்த தளங்களைப் பார்க்கிறீர்கள், அந்த தளங்களில் என்னென்ன பார்க்கிறீர்கள், உங்களின் விருப்பம் என்ன, போன்றவற்றை எல்லாம் சேகரித்து அதன் மூலம் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பொருள் பிடித்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அந்த பொருளுக்கான விளம்பரத்தை மட்டும் உங்களுக்குக் காட்டுவது. இதனைத் தான் டார்கெட்டட் ஆட்ஸ் (Targeted ads) எனக் குறிப்பிடுகிறார்கள். அனைத்து பயனர்களுக்கும், அனைத்து பொருள்களையும் காட்டுவதை விட, யார் யாருக்கு எதை விளம்பரத்தைக் காட்ட வேண்டுமோ அதை மட்டும் விளம்பரப்படுத்துவது. அதனால்தான், நீங்கள் ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசானில் தேடிய பொருள் நீங்கள் இணையத்தில் எங்குச் சென்றாலும் உங்களுக்குக் காண்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும்.

Privacy policy warning message

பயனர்களின் தகவல்கள் இல்லை என்றால், குறிப்பிட்ட விளம்பரங்களைப் பயனர்களுக்குக் காட்ட முடியாது. இது பேஸ்புக்கிற்கு பலத்த அடி. ஆப்பிள் இப்படிச் செய்வதனால் சிறு வணிகர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என சில மாதங்களுக்கு முன்பே அமெரிக்க தினசரி பத்திரிகைகளில் இரண்டு பக்கங்களுக்கு விளம்பரம் செய்திருந்தது பேஸ்புக். இந்த கொரோனா காலத்தில் Targeted ads மூலமாகச் சிறு வணிகர்களின் வியாபாரம் 44 சதவிகிதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது எனவும் ஒரு ஆய்வை சுட்டிக்காட்டியது. மேலும் , Targeted ads இல்லையென்றால் சிறு வணிகர்களின் 60 சதவிதிம் விற்பனையில் இழப்பைச் சந்திப்பார்கள் எனவும் தரவுகளை எடுத்துக்காட்டுகிறது பேஸ்புக்.

என்ன சொல்கிறது ஆப்பிள்?

'என்ன விதமான தகவல்கள் தங்களிடம் இருந்த பெற வேண்டும் எனத் தீர்மானிக்கவும் அவை எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன எனத் தெரிந்து கொள்ளவும் பயனர்களுக்கு முழு உரிமை உள்ளது. பேஸ்புக் தாராளமாகத் தரவுகளைச் சேகரித்துக் கொள்ளட்டும். ஆனால், அதற்கான அனுமதியை மட்டும் பயனர்களிடம் பெற்றுக் கொள்ளட்டும்' என ஆப்பிளின் தலைமை செயல் அதிகாரியான டிம் குக் சில மாதங்களுக்கு முன்பே ட்வீட் செய்திருக்கிறார். "நீங்கள் என்ன தகவல்களை வேண்டுமானாலும் சேகரியுங்கள், ஆனால் அதற்கான பயனர்களின் அனுமதியைப் பெற்று வெளிப்படைத்தன்மையுடன் இருங்கள்" என்பதுதான் ஆப்பிளின் வாதம்.

என்ன செய்யவிருக்கிறது பேஸ்புக்?

பெரும்பாலான நிறுவனங்கள் ஆப்பிளின் புதிய தனியுரிமைக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அதற்கேற்ப தங்கள் செயலிகளில் மாற்றங்கள் செய்து வருகின்றன. பேஸ்புக்கும், வேறு வழியின்றி தங்கள் செயலிகளில் மாற்றங்கள் செய்யப்போவதாக அதன் வலைப்பதிவில் தெரிவித்திருக்கிறது.



from விகடன் https://ift.tt/3dJtIGE
via IFTTT

No comments:

Post a Comment