நொடிப் பொழுதில் குழந்தையைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்; மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ வெளியீடு

தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தையை நொடிப் பொழுதில் காப்பாற்றிய ரயில்வே ஊழியரின் மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோவை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வாங்கனி ரயில் நிலையம் உள்ளது. இதில், 2-ம் நடைமேடையில் தாயுடன் குழந்தை ஒரு நடந்து வந்து கொண்டிருந்தது. தாயின் வலதுபுறம் தண்டவாளத்தை ஒட்டி நடந்துவந்த குழந்தை, தன்னையும் அறியாமல் நிலைதடுமாறி உள்ளே தவறி விழுந்தது. அப்போது எதிர்ப் புறத்தில் ரயில் ஒன்று விரைந்து வந்தது.


Post a Comment

0 Comments