Tuesday, May 25, 2021

https://gumlet.assettype.com/vikatan/2020-07/cf5bdb1d-5b4e-427e-9e7e-2bff99c12a1c/180706_F_PO640_106.jpegசமூக வலைதளங்கள் இன்னும் 2 நாள்களில் முடக்கப்படுமா? அரசு தரப்பில் சொன்னது என்ன?

கடந்த பிப்ரவரி 25-ம் தேதி சமூக வலைதளங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. கூகுள் நிறுவனம் தவிர ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற முக்கிய சமூக வலைதளங்கள் மத்திய அரசின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி உரிய நடவடிக்கைகள் எடுக்க இன்னும் இரண்டு நாள்களே அவகாசம் உள்ளது. இதனால் இந்த தளங்கள் முடக்கப்படும் அபாயம் உள்ளது.

பிப்ரவரி மாதம் வெளியான நெறிமுறைகளை நடைமுறைபடுத்த மூன்று மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. சமூக வலைதளங்கள் மட்டும் இன்றி இணையதள செய்தி நிறுவனங்கள் மற்றும் ஓடிடி தளங்களும் புதிய கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். பின்பற்றாத நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சமூக வலைதளங்கள் (மாதிரி படம்)

மக்கள் சுதந்திரமாக தங்கள் கருத்துக்களையும் அரசு குறித்த விமர்சனங்களையும் பதிவிட்டு வரும் சமூகவலைதளங்கள் பல சூழலில் குரலற்றவர்களின் குரலாக இருந்துள்ளன. மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் சமூக வலைதளங்களை அரசின் நேரடி கண்காணிப்புக்கு கீழ் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மத்திய அரசின் புதிய நெறிமுறைகள் படி இந்தியாவில் செயல்பட இருக்கும் சமூகவலைதளங்கள் இந்தியாவை சேர்ந்த ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும். அவரின் இருப்பிடம் மற்றும் தகவல்களை அரசுக்கு வழங்க வேண்டும். அவர் சமூக வலைதளங்களில் வரும் புகார்களுக்கு தீர்வு காணவேண்டும். சர்ச்சைகுறிய கருத்துக்கள் மற்றும் உள்ளீடுகளை கண்காணித்தல், நீக்குதல் ஆகிய பணிகளை அவர் மேற்கொள்ளவேண்டும்.

மேலும் மேற்பார்வை செய்யும் குழு ஒன்று அமைக்கப்படும். அதில் பாதுகாப்பு, வெளியுறவு, உள்ளாட்சி, தகவல் தொடர்பு, தகவல் ஒளிபரப்பு, சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு ஆகிய துறைகளை சேர்ந்த நபர்கள் இடம்பெறுவர். அரசின் நெறிமுறைகளை மீறும் கருத்துகள் அல்லது வீடியோக்களை வெளியிடுபவர்களை இந்தக் குழு விரும்பினால் விசாரணைக்கு அழைக்க முடியும்.

சமூக வலைதளங்கள்

மேலும் பதிவிடப்படும் கருத்துகளையும், வீடியோக்களையும் நேரடியாக முடக்கும் அதிகாரம் உடைய ஓர் அதிகாரியை அரசு நியமிக்கும். கருத்துகள் சட்டத்தை மீறுவதாக நினைப்பவர்கள் அரசு அமைக்கும் குழுவில் மேல்முறையீடு செய்யலாம்.

பிப்ரவரி 25ம் தேதி தகவல் தொழில்நுட்ப துறை வெளியிட்ட அறிவிப்புகளை எந்த நிறுவனமும் பின்பற்றவில்லை. சில நிறுவனங்கள் இறுதி தேதியை ஆறு மாதம் ஒத்திவைக்க கோரிக்கை விடுத்துள்ளன. ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் ஏற்கெனவே அங்குப் பகிரப்படும் செய்திகள் குறித்த உண்மைத்தன்மையைச் சரிசெய்வதற்குத் தனியாகக் குழுக்களை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



from விகடன் https://ift.tt/3yBePhT
via IFTTT

No comments:

Post a Comment