Friday, May 7, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/05/07/large/668057.jpg'தமிழக முதல்வர்', 'திராவிட இனத்தைச் சேர்ந்தவன்'; ஸ்டாலினின் ட்விட்டர் கணக்கில் மாற்றம்

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதைத்தொடர்ந்து, அவருடைய ட்விட்டர் பக்கத்தில் 'தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்' என மாற்றப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6 -ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடைபெற்றது. இதில், திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சார்பில் 125 பேர், உதயசூரியன் சின்னத்தில் வென்றவர்கள் 8 பேர் என்கிற நிலையில் 133 பேருடன் பெரும்பான்மை பெற்ற ஸ்டாலின், ஆட்சி அமைக்க உரிமை கோரியதன் அடிப்படையில், இன்று (மே 07) காலை ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மு.க.ஸ்டாலினுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eoKcUQ
via IFTTT

No comments:

Post a Comment