சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி வாய்ப்பு தேடி வரும் நபர்களிடம் பணம் பெற்று பல மாதங்களாக மோசடி செய்து வந்த நபர் மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்கு .

தமிழ் நாட்டில் வெவ்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் சினிமா  ஆசையில் சென்னைக்கு வருகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது.

அப்படி வருபவர்களிடம் சினிமாவில் பல முன்னணி இயக்குனர்கள்,நடிகர்கள் பெயரை சொல்லி புகைப்படம் காண்பித்து வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்து ஏமாற்றுவதும் வழக்கமாகிவிட்டது.சென்னையை அடுத்த பூந்தமல்லியை சேர்ந்தவர் நடிகை தியா/ஷோபனா(38)அவர் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடித்துள்ளார்.கடந்த பிப்ரவரி மாதம் ஒரு படத்தின் ஆடிஷன்காக சென்னை சாலிகிராமம் அருணாச்சல ரோட்டில்  அமைந்துள்ள "G STUDIO"விற்கு சென்றுள்ளார்.ஸ்டூடியோவின் உரிமையாளர் 'குரு சேனாபதி' புதிய படத்தில் நடிக்க வைப்பதாக கூறி பட ஒத்திகைக்காக அழைத்தனர்.


மேல் புகைப்படத்தில் இருப்பவர் மோசடி செய்த நபர் பெயர் (குருசேனாபதி)

தனக்கு தமிழ் சினிமாவின் பெரிய இயக்குனர்கள்  நடிகர்கள் தெரியும் எனவும்  அதிலும் முன்னனி இயக்குனர்  திரு.K.பாக்யராஜின் அசிஸ்டென்ட் என கூறிவந்துள்ளான்.

கடந்த ஏப்ரல் மாதம் நான்கு லட்ச ரூபாய் காசோலை ஒன்றை காண்பித்து இன்னும் பத்து நாட்களில் பணம் வந்துவிடும் தற்போது அவசரமாக ஒரு லட்ச ரூபாய் தேவை படுகிறது நாமெல்லாம் ஒரே டீம்  என்று பொய் சொல்லி எப்படியாவது பணத்தை தயார் செய்து தரும்படி வற்புறுத்தியுள்ளான்.

முதலில் தயங்கிய தியா பின்பு 10நாளில் தான் பணம் திரும்ப வருமே என்று அவரது தங்கை மற்றும் தோழியிடம் சிறிது சிறிதாக பணம் வாங்கி GOOGLE PAY மூலம் மொத்தம் 66,500 ரூபாயை குருசேனாபதிக்கு (அந்த திருடனுக்கு) ஏப்ரல் முதல் வாரத்தில்  அனுப்பி உள்ளார் பின்பு  LOCKDOWN போடப்பட்டது.அதன் பின் அலைபேசியில் தொடர்பு கொண்டபோது முண்ணுக்கு பின் முரணாக பேசினான்.

அடுத்ததாக இயக்குனர் K. பாக்யராஜிடம் தொடர்பு கொண்ட போது அந்த குரு தன்னிடம் உதவி இயக்குனராக வேலை செய்ததே இல்லை என கூறினார்.

ஐந்து மாதங்கள் கடந்த பின்னர் தான் ஏமாற்ற படுகிறோம் என்று உணர்ந்த தியா    தன் தங்கையுடன் வந்து R5 விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு(CRIME) அதிகாரி குழலி அவர்களிடம் ஆகஸ்ட் 23ஆம் நாள் புகாரளித்தனர்.

புகாரளித்து இரண்டு மாதங்கள் கழிந்த பின்பும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை பின்பு  விசாரித்ததில் குருவும் அவனது கூட்டாளியும் வழக்கறிஞரை வைத்து நாள் கடத்தி கொண்டிருப்பது தெரியவந்தது.

இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிய தியா குடும்பத்தினர் தமிழக DGP திரு.சைலேந்திர பாபு அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். 

சினிமாவின் பெயரை சொல்லி இன்னும் பண‌ மோசடி நடந்த வண்ணம் உள்ளது. ஆகையால் உஷார்.....

Post a Comment

0 Comments